மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பூரியில் உள்ள மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ சதாசிவ வளாகத்தில் நிர்வாக கட்டடங்கள், விடுதிகள், விளையாட்டுக் கட்டமைப்புகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அடிக்கல் நாட்டினார்

प्रविष्टि तिथि: 18 NOV 2023 6:41PM by PIB Chennai

ஒடிசா மாநிலம் பூரியில் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ சதாசிவ வளாகத்தில் நிர்வாக கட்டடம், விடுதி கட்டடம், குடியிருப்புகள் மற்றும் விளையாட்டுக் கட்டமைப்புகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அடிக்கல் நாட்டினார். சமத்துவம், அதிகாரமளித்தல் குறித்த மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கையும் அவர்  தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய திரு தர்மேந்திரப் பிரதான், பூரியில் உள்ள இந்தப் பல்கலைக்கழக வளாகம் சமஸ்கிருத மொழியை ஊக்குவிப்பதில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றார். சமஸ்கிருதத்துடன் அனைத்து இந்திய மொழிகளுக்கும் முன்னுரிமை அளிக்கும் ஒரு புதிய நடைமுறையை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார்.  சமஸ்கிருதம், தமிழ் போன்ற தொன்மையான மொழிகளுடன் இந்தியா பல வளமான மொழிகளைக் கொண்ட நாடு என்று திரு தர்மேந்திரப் பிரதான் கூறினார்.

பூரியில் உள்ள ஸ்ரீ சதாசிவ வளாகம், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் மிகப்பெரிய மற்றும் முதன்மையான வளாகங்களில் ஒன்றாகும், இது 15.28 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. .

*****

ANU/AD/PLM/DL


(रिलीज़ आईडी: 1977901) आगंतुक पटल : 135
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी