சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிறருக்கு இளம் சாதனையாளர்களுக்கான உயர் கல்வி உதவித்தொகை திட்டம்
Posted On:
14 NOV 2023 6:59PM by PIB Chennai
இளம் சாதனையாளர்களுக்கான உயர் கல்வி உதவித்தொகை திட்டம் - ஸ்ரேயாஸ் திட்டம் 2021-22 முதல் 2025-26 வரை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிறருக்கு நடைமுறையில் உள்ள இரண்டு மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது - (1) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய உதவித்தொகை (2) டாக்டர் அம்பேத்கர் மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான கல்விக் கடனுக்கான வட்டி மானியத் திட்டம்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் தரமான உயர் கல்வி பெறுவதற்கான உதவித்தொகை மற்றும் வெளிநாட்டு படிப்புக்கான கல்விக் கடனுக்கான வட்டி மானியம் ஆகியவற்றை வழங்குவது இத்திட்டங்களின் முக்கிய நோக்கமாகும்.
1. ஓபிசி மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகை
பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அறிவியல் நிறுவனங்களில் எம்.பில் மற்றும் பி.எச்.டி போன்ற பட்டங்களைப் பெற தரமான உயர் கல்வியைப் பயில்வதற்கு ஓபிசி மாணவர்களுக்கு நிதி உதவியை வழங்குவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்
எம்.பில்/ பி.எச்.டி பட்டங்களுக்கு வழிவகுக்கும் மேம்பட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஆண்டுக்கு மொத்தம் 1000 இளம் ஆராய்ச்சி கல்வி உதவித்தொகைகளை வழங்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழுவால் (யுஜிசி) அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த திட்டம், எம்.பில் மற்றும் பி.எச்.டி படிக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு யு.ஜி.சி பெல்லோஷிப் வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் யு.ஜி.சி.யால் செயல்படுத்தப்படுகிறது.
2023-24 ம் ஆண்டில் 40.11 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது (3வது காலாண்டில்)
2. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான வெளிநாட்டுக் கல்விக்கான கல்விக் கடனுக்கான வட்டி மானியம் வழங்கும் டாக்டர் அம்பேத்கர் திட்டம்
ஓ.பி.சி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் முதுநிலை, எம்.பில் மற்றும் பி.எச்.டி நிலையில் வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளைத் தொடர வெளிநாட்டுக் கல்விக்கான கல்விக் கடனுக்கான காலத்திற்கு செலுத்த வேண்டிய வட்டிக்கு வட்டி மானியம் வழங்கும் மத்திய அரசின் திட்டமாகும்.
இத்திட்டம் கனரா வங்கி (திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு வங்கி) மூலம் செயல்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் உயர்கல்வி பயில இந்த திட்டம் பொருந்தும். வட்டி மானியம் இந்திய வங்கிகள் சங்கத்தின் (ஐபிஏ) தற்போதைய கல்விக் கடன் திட்டத்துடன் இணைக்கப்பட்டு முதுநிலை, எம்.பில் மற்றும் பி.எச்.டி நிலையிலான படிப்பிற்காக சேரும் மாணவர்களுக்கு அளிக்கப்படும்.
**********
ANU/AD/IR/AG/KRS
(Release ID: 1976975)
Visitor Counter : 146