எரிசக்தி அமைச்சகம்

இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் மின்துறையின் முன்முயற்சிகளை மின்சார அமைச்சகம் காட்சிப்படுத்தியுள்ளது, மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் மின்துறையின் அரங்கை திறந்து வைத்தார்

Posted On: 14 NOV 2023 5:33PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி 2023 -ல் மத்திய அரசின் மின்சார அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட மின்சாரத்துறை அரங்கை மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு. ஆர்.கே.சிங் இன்று திறந்து வைத்தார். மின்சாரத் துறையின் முக்கிய முன்முயற்சிகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழில்துறையினரிடம் முன்வைப்பதும், அரசின் திட்டங்கள், கொள்கைகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், பங்கேற்பை மேம்படுத்துவதையும் இந்த அரங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர்ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாட்டையொட்டி இந்தியாவின் நிலைப்பாடு குறித்து குறிப்பிட்டார். வளர்ந்த நாடுகள் தான் முதலில் தங்கள் கார்பன் உமிழ்வைக் குறைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

 

வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் மின்சார தேவையில் நாங்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்றும், அதனைப் பொறுப்புடன்  நிறைவேற்றுவோம் என்றும் திரு ஆர் கே சிங் குறிப்பிட்டார்.

********

ANU/AD/IR/AG/KRS



(Release ID: 1976971) Visitor Counter : 68


Read this release in: English , Urdu , Marathi , Hindi