பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தோ-பசிபிக் பிராந்திய உரையாடல் 2023 (ஐபிஆர்டி-2023)

Posted On: 14 NOV 2023 11:05AM by PIB Chennai

இந்தியக் கடற்படையின் வருடாந்திர உயர்மட்ட சர்வதேச மாநாடு - இந்தோ-பசிபிக் பிராந்திய உரையாடல் 2023 நவம்பர் 15 முதல் 17 வரை புதுதில்லியில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் நவம்பர் 15 அன்று இந்திய துணைக் குடியரசுத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் முக்கிய உரையாற்றுகிறார். இந்த மாநாட்டின் (https://maritimeindia.org/indo-pacific-regional-dialogue-2023/) விவாதங்களுக்கு விரிவான வழிகாட்டுதலை வழங்க மத்திய அமைச்சர்கள் மற்றும் இந்திய அரசின் மூத்த அதிகாரிகள் சிறப்புரையாற்ற உள்ளனர்.

கோவாவில் (https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1973395) 2023 அக்டோபர் 29 முதல் 31 வரை இந்தியக் கடற்படை நடத்திய கோவா கடல்சார் மாநாடு 2023-ஐத் தொடர்ந்து ஐபிஆர்டி மாநாடு நடைபெறுகிறது.

ஐபிஆர்டியின் முதல் இரண்டு மாநாடுகள் முறையே 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் புதுதில்லியில் நடைபெற்றன. கோவிட் -19 காரணமாக ஐபிஆர்டி 2020 ரத்து செய்யப்பட்டது. ஐபிஆர்டியின் மூன்றாவது பதிப்பு 2021 ஆம் ஆண்டில் ஆன்லைன் முறையிலும், நான்காவது பதிப்பு 2022 ஆம் ஆண்டில் புதுதில்லியில் நடத்தப்பட்டது.

***

ANU/SMB/BS/KPG


(Release ID: 1976839) Visitor Counter : 163


Read this release in: English , Urdu , Hindi