பாதுகாப்பு அமைச்சகம்
ஐஎன்எஸ் சுமேதா கப்பல் நமீபியா சென்றுள்ளது
प्रविष्टि तिथि:
13 NOV 2023 6:07PM by PIB Chennai
மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் அட்லாண்டிக் பகுதியில் இந்திய கடற்படையின் பணி அடிப்படையிலான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக ஐஎன்எஸ் சுமேதா கப்பல் 2023 நவம்பர் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நமீபியாவின் வால்விஸ் விரிகுடாவில் துறைமுக அழைப்பின் அடிப்படையில் பணிகளை மேற்கொண்டுள்ளது.
நமீபியாவின் இந்த துறைமுக அழைப்பு அந்நாட்டுனான இந்தியாவின் நல்லுறவின் வெளிப்பாடாகும். கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் நட்பு நாடுகளின் ஒற்றுமையை வலுப்படுத்தும் அம்சங்களின் ஒரு பகுதியாக ஐஎன்எஸ் சுமேதா கப்பல் நமீபியா சென்றுள்ளது. இந்தப் பயணத்தின்போது, கட்டளை அதிகாரி, நமீபிய கடற்படையின் மூத்த அதிகாரிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்தியாவும் நமீபியாவும் வலுவான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் ராணுவ பரிமாற்றங்களைக் கொண்டுள்ளன. பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இந்தியா, பல ஆண்டுகளாக நமீபிய ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்துள்ளது. தற்போதைய இந்தப் பயணம் நட்பு நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளில் ஒரு பகுதியாகும்.
(Release ID: 1976709)
ANU/AD/PLM/KRS
***
(रिलीज़ आईडी: 1976746)
आगंतुक पटल : 175