சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இணக்கம் மற்றும் அறிக்கை அடிப்படையில் செம்மரக் கட்டைகளுக்கான குறிப்பிடத்தக்க வர்த்தக செயல்முறையின் மதிப்பாய்விலிருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது என திரு பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார்

Posted On: 13 NOV 2023 2:32PM by PIB Chennai

அண்மையில் முடிவடைந்த, அழிந்து வரும் உயிரினங்களில் வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் பற்றிய ஒப்பந்தம் குறித்த நிலைக்குழு கூட்டம், இந்தியாவின் வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளுக்குப் பெரிய ஊக்கமாக அமைந்தது என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதள எக்ஸ் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள திரு. பூபேந்தர் யாதவ், “வனவிலங்குச் சட்டத் திருத்தத்தின் விளைவாக, அழிந்து வரும் உயிரினங்களில் வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் பற்றிய ஒப்பந்தத்தின்படி  இந்திய சட்டத்தின் வகை 1 -ல் இந்தியாவின் சி..டி..எஸ் சட்டம் இடம் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு முதல் இந்தியா செம்மரக்கட்டைகளுக்கான குறிப்பிடத்தக்க வர்த்தக மறுஆய்வு நடைமுறையில் உள்ளது என்று அமைச்சர் கூறினார். நமது இணக்கம் மற்றும் அறிக்கையின் அடிப்படையில், செம்மரக்கட்டைகளுக்கான  குறிப்பிடத்தக்க வர்த்தக மதிப்பாய்வில் இருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். செம்மரக்கட்டைகள் பயிரிடும் விவசாயிகள், தோட்டங்களில் இருந்து செம்மரக்கட்டைகளை  சாகுபடி செய்து ஏற்றுமதி செய்வதன் மூலம் தங்கள் வருமானத்தை அதிகரிக்கவும், நிலையான வருமான ஆதாரமாக அதிக செம்மரங்களை வளர்க்க விவசாயிகளை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்றும் திரு யாதவ் தெரிவித்துள்ளார்.

அழியும் நிலையில் உள்ள வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகத்திற்கான ஒப்பந்தத்தின் 77வது நிலைக்குழு கூட்டம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நவம்பர் 6 முதல்10வரைநடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்  வனத்துறை  கூடுதல் தலைமை இயக்குநர்  டாக்டர் எஸ்.பி.யாதவ் தலைமையிலான குழு பங்கேற்றது.

******

ANU/SMB/PLM /KPG

 

 


(Release ID: 1976655) Visitor Counter : 141