பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வருடாந்திர கடற்படை கல்விச் சங்க மாநாடு போர்பந்தரில் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 11 NOV 2023 5:55PM by PIB Chennai

வருடாந்திர கடற்படை கல்வி சங்க (என்இஎஸ்) மாநாடு - 2023 குஜராத்தில் அதன் தலைமையகம் உள்ள போர்பந்தரில் 2023 நவம்பர் 09 மற்றும் 10 தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கடற்படைக் கல்விச் சங்கத்தின் தலைவர் வைஸ் அட்மிரல் திரு கிருஷ்ணா சுவாமிநாதன்துணைத் தலைவர் கமாடோர் திரு ஜி ராம்பாபு, மற்றும் நாடு முழுவதும் உள்ள கடற்படை பள்ளிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிர்வாகக் குழு, மேலாண்மை ஆலோசனைக் குழு மற்றும் கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. முதல் முறையாக, பல்வேறு கடற்படை நிலையங்களைச் சேர்ந்த கடற்படை மழலையர் பள்ளிகளின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், கடந்த கல்வியாண்டில், கல்வியில் சிறந்து விளங்கிய பள்ளிகளுக்கு, கடற்படைக் கல்விச் சங்கத் தலைவர் கோப்பைகளை வழங்கினார். பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய அவர், கடற்படை வீரர்களின் குழந்தைகளுக்குத் தரமான கல்வியை வழங்குவதில் கடற்படையினர் குழந்தைகள் பள்ளிகளின் (என்.சி.எஸ்.) பங்கைப் பாராட்டினார். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.  கல்வி மற்றும் இணை பாடத்திட்ட நடவடிக்கைகளில் சிறந்து விளங்குவதற்கு உகந்த கற்றல் சூழலை ஏற்படுத்துமாறும் அவர் வலியுறுத்தினார்.

****  

PKV/PLM/DL


(रिलीज़ आईडी: 1976418) आगंतुक पटल : 175
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी