குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
11 NOV 2023 3:41PM by PIB Chennai
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தங்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியின் முழு வடிவம்:
“தீபத் திருநாளான தீபாவளி நாளையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
ஆழ்ந்த பயபக்தியுடனும் எல்லையற்ற மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் தீபாவளி, இருளின் மீது ஒளியின் வெற்றியைக் குறிக்கிறது. நம்பிக்கை மற்றும் நல்லொழுக்கத்தின் நீடித்த உணர்வை இந்தப் பண்டிகை பிரதிபலிக்கிறது.
நேர்மையான, அறம் சார்ந்த வாழ்க்கை வாழவும், எந்தச் சூழ்நிலையிலும் நம்மால் இயன்றவரை நமது கடமையைச் செய்வதற்கும் தீபாவளிப் பண்டிகை நமது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்தத் தீபாவளி மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் கலங்கரை விளக்கமாக அமையட்டும். இது நமது நாட்டை செழிப்பு மற்றும் வெற்றி நிறைந்த எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்லட்டும். இந்தப் பண்டிகையின் பிரகாசமும் ஒளியும் நமது இதயத்தின் மையத்தில் அறிவையும், ஞானத்தையும், இரக்கத்தையும் பரப்பட்டும்.”
****
PKV/PLM/DL
(रिलीज़ आईडी: 1976368)
आगंतुक पटल : 149