நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி இல்லாத சுரங்கங்களில் தண்ணீரை சேமித்து மின்சாரம் தயாரிக்க நிலக்கரி அமைச்சகம் நடவடிக்கை

Posted On: 10 NOV 2023 4:26PM by PIB Chennai

நிலக்கரி இல்லாத நிலக்கரி சுரங்கங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை சேமிக்கும்  திட்டங்களை நிலக்கரி அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதன்படி, காலியான பரந்த நிலப்பரப்பை பொருளாதார ரீதியாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்தத் திட்டத்தின் நோக்கம் மாற்று எரிசக்தி ஆதாரத்தை நோக்கி பன்முகப்படுத்துவதாகும். தண்ணீர் சேமிப்புத்  திட்டங்கள் மூலம், நிலக்கரித் துறையில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் புனல் மின்சாரத்தை உருவாக்கவும், சூரிய மின் சக்தியைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பகலில் சூரிய சக்தி மின்சாரத்தையும், இரவில் புனல் மின்சாரத்தையும் உற்பத்தி செய்வதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

குழியில் உள்ள நீர்த்தேக்கத்திலிருந்து மேற்பரப்பில் உள்ள நீர்த்தேக்கத்திற்கு செலுத்தப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க தண்ணீர் சேமிப்பு மின் நிலையங்கள் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்துகின்ற. தேவை குறைவாக உள்ள காலங்களில், நீர்த்தேக்கத்தில் தண்ணீர் பம்ப் செய்யப்படுகிறது. தேவை அதிகமாக இருக்கும்போது, பவர்ஹவுஸில் டர்பைனை இயக்கவும், மின் கட்டமைப்பில் மின்சாரம் பாய்ச்சவும் தண்ணீர் விடப்படுகிறது. நிலக்கரி உற்பத்தி செய்யும் பகுதிகளில் அதிக நிலப்பரப்பைக் கொண்ட 200-க்கும் மேற்பட்ட நிலக்கரி இல்லாத சுரங்கங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற பன்முகப்படுத்தல் ஆய்வுக் கூட்டத்தில், கோல் இந்தியா நிறுவனம் தண்ணீர் சேமிப்புத் திட்டங்களுக்கான மதிப்பீடு மற்றும் சாத்தியக்கூறு ஆய்வுக்காக கைவிடப்பட்ட 20-க்கும் மேற்பட்ட சுரங்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், வள பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் நிலக்கரி அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. இத்தகைய முன்முயற்சி நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நிலக்கரித் துறையின் கார்பன் தடத்தைக் குறைக்கவும் உதவும். வளங்களை வினைத்திறன் மிக்க முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதிலும், மக்களுக்கு சீரான மின்சார விநியோகத்தைப் பராமரிப்பதிலும் அமைச்சகம் உறுதியாக உள்ளது.

 

***

ANU/SMB/BS/RS/KRS

(Release ID: 1976167)


(Release ID: 1976244) Visitor Counter : 115


Read this release in: English , Urdu , Hindi , Kannada