ஆயுஷ்
ஆயுர்வேத தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது
Posted On:
10 NOV 2023 3:11PM by PIB Chennai
எட்டாவது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, நிகழ்வு ஒன்றில் பேசிய மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், அணுசக்தி, பூச்சிக்கொல்லிகள், நச்சு சூழல் ஆகியவற்றின் இந்த சகாப்தத்தில் ஆயுர்வேதம் ஒரு வரப்பிரசாதம் போன்றது என்று கூறினார். தொடர்ச்சியான முயற்சிகளால், ஆயுஷ் அமைச்சகம் நாடு முழுவதும் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட நல்வாழ்வு மையங்களை நிறுவியுள்ளது. ஆயுஷ் துறையின் சேவை வழங்கலை மேலும் வலுப்படுத்த, ஆயுஷ் கட்டமைப்புத் திட்டம் தொடங்கப்பட்டு அதை வலுப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்றார்.
ஆயுர்வேத தினம் ஒவ்வொரு ஆண்டும் தன்வந்திரி ஜெயந்தி அன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதன் மூலம், ஆயுர்வேத தினத்தின் புகழ் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. உலகளாவிய விரிவாக்கம் காரணமாக மருத்துவ தாவர சாகுபடியின் தேவை உலகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த முறை எட்டாவது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, ஆயுர்வேத தினத்தின் ஒரு வலைத்தளம் உருவாக்கப்பட்டது. இது உலகெங்கிலும் இருந்து சுமார் இருபது கோடி மக்களின் ஆதரவைப் பெற்றது. ஆயுர்வேத தினத்தின் உலகளாவிய பிரச்சாரமான 'ஒரு ஆரோக்கியத்திற்கான ஆயுர்வேதம்' எனும் செய்தி மற்றும் ஜி -20 கூட்டத்தின் உலகளாவிய கருப்பொருள் 'வசுதைவ குடும்பகம்' ஆகியவை ஒட்டுமொத்த உலகமும் உற்று நோக்கும் ஓர் அழிக்க முடியாத முத்திரையை ஏற்படுத்தியுள்ளன என்று திரு சோனாவால் தனது தலைமை உரையில் கூறினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான ஹரியானா சட்டமன்ற சபாநாயகர் திரு கியான் சந்த் குப்தா, ஆயுர்வேத தினத்தை நாட்டிலும் உலகிலும் இவ்வளவு பெரிய அளவில் கொண்டாடியதற்காக ஆயுஷ் அமைச்சகத்தை பாராட்டினார். மேலும் ஆயுர்வேத வளர்ச்சிக்கு ஹரியானா அரசு எடுத்து வரும் முயற்சிகளையும் சுட்டிக்காட்டினார்.
ஆயுர்வேத தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் திரு முஞ்சபரா மகேந்திரபாய், ஆயுர்வேத மருந்துகளின் மூலக்கூறு பண்புகளைப் புரிந்துகொள்ள ஐ.ஐ.டி, எய்ம்ஸ் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர் போன்ற நிறுவனங்கள் ஆயுஷுடன் கைகோர்த்துள்ளன என்றார்.
தேசிய தன்வந்திரி ஆயுர்வேத விருதுகள் வைத்யா ஆர்.எம்.அவாஹத், வைத்யா பி.வி.தமானியா, வைத்யா எல்.மகாதேவன் சர்மா ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
***
(Release ID: 1976122)
ANU/SMB/BS/RS/KRS
(Release ID: 1976240)
Visitor Counter : 117