வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
பயன்பாட்டைக் குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி - தூய்மை தீபாவளிக்கான கர்நாடகாவின் களம்
प्रविष्टि तिथि:
10 NOV 2023 12:22PM by PIB Chennai
தூய்மையான தீபாவளி, மகிழ்ச்சியான தீபாவளி என்ற இயக்கத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் முன்முயற்சிகளைத் தொடங்கி, நகரங்கள் அனைத்தும் தூய்மை கொண்டாட்டங்களுக்கு தயாராக உள்ளன. திறந்தவெளிகள், சந்தை இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயன்பாட்டைக் குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி மையங்களைக் கர்நாடக அரசு அமைத்துள்ளது. இந்த மையங்களில் மக்கள் தங்கள் பழைய, பயன்படுத்தப்படாத பொருட்களை நன்கொடையாக வழங்குவதோடு, தூய்மையான தீபாவளி கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்து பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறது.
பள்ளி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட கலைப்பொருட்கள் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தீபங்கள் மற்றும் பிற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் இந்த மையம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சமூக ஈடுபாட்டிற்காக, அனைத்து மதத் தலங்களும் இயற்கை மலர்கள், இலைகள் அல்லது இயற்கை வண்ணங்களிலிருந்து மகிழ்ச்சியான தீபாவளி ரங்கோலிகளை உருவாக்க ஊக்குவிக்கப்படுகின்றன. மத வழிபாட்டுத் தலங்கள், சந்தைகள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றில் மக்களின் உறுதிமொழிகளைப் பதிவு செய்வதற்காக கியூஆர் கோடு ஸ்டாண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்காக, சிறப்பு சந்தைகள் ஏ.பி.எம்.சி உடன் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதில் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளி பொருட்கள், அலங்காரங்கள் முதல் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வரை உள்ளன, இது பொறுப்பான தேர்வுகளை செய்ய மக்களை ஊக்குவிக்கிறது.
இது தவிர, சில நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கென தனித்துவமான முன்முயற்சிகளைக் கொண்டு வந்துள்ளன. ஹாசன்பாம்பா கோயில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தீபாவளி பருவத்தில் பொதுமக்களுக்காகக் கதவுகளைத் திறக்கிறது. அப்போதுதான் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிப்பட்டு வருகின்றனர். கோயிலுக்கு வருகை தருபவர்களிடம் விழிப்புணர்வையும், ஒற்றுமையையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஹாசன் குடிமை அமைப்பு, கோவிலில் க்யூ.ஆர்.கோட் ஸ்டாண்டுகளை அமைத்துள்ள தூய்மையான, பசுமை தீபாவளிக்கான தூய்மை தீபாவளி கையொப்ப இயக்கத்தில் கையெழுத்திட பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதனிடையே உடுப்பியில் உள்ள பிரபல சுற்றுலா கடற்கரையில் பொதுமக்களின் பார்வைக்காக மணல் ஓவியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விஜய நகரத்தில் பசுமைப் பட்டாசுகள், பட்டாசுகளால் ஏற்படும் மாசுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த குடிசைப் பகுதிகளில் துப்புரவுத் தொழிலாளர்களால் மண் அகல் விளக்குகள் விநியோகிக்கப்படுகின்றன. குடிமக்கள், மத நிறுவனங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கிராம உள்ளாட்சி அமைப்புகள், அரசின் ஒருங்கிணைந்த மற்றும் உளவுப்பூர்வமான முயற்சிகள் தூய்மைத் தீபாவளி மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கொண்டாட்டங்களுக்கு உகந்த சூழலை உருவாக்கி வருகின்றன.
***
ANU/SMB/BS/RS/KV
(रिलीज़ आईडी: 1976138)
आगंतुक पटल : 190