வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு ஆகிய அமைப்புகளின் கூட்டங்களில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் 13-ம் தேதி சான் பிரான்சிஸ்கோ பயணம் மேற்கொள்கிறார்
Posted On:
10 NOV 2023 12:10PM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் நவம்பர் 13 முதல் 16 வரை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
அங்கு நடைபெறவுள்ள இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புகளின் பல்வேறு அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தகப் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்தப் பயணத்தின் போது அவர் பிரபல வர்த்தக பிரமுகர்கள், முக்கியக் கல்வியாளர்கள், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
நவம்பர் 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெறும் மூன்றாவது தனிப்பட்ட இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் அமைச்சர்கள் கூட்டத்தில் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பங்கேற்கவுள்ளார். அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் மற்றும் அமைப்பின் பிற நாடுகளின் அமைச்சர்களுடன் அமைச்சர் இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.
நவம்பர் 16-ம் தேதி நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் கூட்டம் உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக்கான கூட்டாண்மை - இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் முதலீட்டாளர் மன்றக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் பங்கேற்கிறார். நவம்பர் 15 முதல் 16 வரை நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் பொருளாதார தலைவர்கள் சந்திப்புகளில் இந்தியாவின் சார்பில் அவர் பங்கேற்கிறார். 30-வது அபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தில் விருந்தினராகப் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது, அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் திருமதி ஜினா ரைமண்டோ, ஐக்கிய அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி திருமதி கேத்ரின் டாய் மற்றும் பல்வேறு துறைகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வார். வர்த்தகத் தடைகளை சரி செய்வது, முதலீடுகளை ஊக்குவிப்பது, தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு போன்ற துறைகளில் அதிக ஒத்துழைப்பை ஊக்குவிப்பது ஆகியவற்றின் அடிப்படையில் இந்த சந்திப்புகள் நடைபெற உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1976072
***
ANU/SMB/BS/RS/KV
(Release ID: 1976132)
Visitor Counter : 149