ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
மருந்துத் துறையின் 3.0 சிறப்பு தூய்மை இயக்கத்தின் சாதனைகள்
Posted On:
08 NOV 2023 4:22PM by PIB Chennai
அக்டோபர் 2 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரையில் அரசின் சிறப்பு தூய்மை இயக்கம் 3.0-ல் மருந்துத்துறை வெற்றிகரமாக பங்கெடுத்துள்ளது. அகமதாபாத், எஸ்.ஏ.எஸ்.நகர், ரேபரேலி, ஹாஜிப்பூர், கொல்கத்தா, குவஹாத்தி மற்றும் ஹைதராபாத்தில் உள்ள தேசிய மருந்து கட்டண ஒழுங்குமுறை ஆணையம் தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகிய துறையின் அமைப்புகளின் செயல்பாடுகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
இந்திய மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் அலுவலகம், கொல்கத்தாவின் பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம் உள்ளிட்டவற்றில் சிறப்பு தூய்மை இயக்கம் 3.0 மேற்கொள்ளப்பட்டது.
அக்டோபர் 31 அன்று இயக்கத்தின் முடிவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மொத்தம் 5823 இயல் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டதில் 1400 கோப்புகள் களையெடுக்கப்பட்டன.
இ-கிளீனிங் திட்டத்தின் கீழ், சமீபத்தில் 3261 'பார்க் செய்யப்பட்ட' மின்-கோப்புகள் மறுஆய்வு செய்யப்பட்டு, எதிர்கால குறிப்புக்காக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் இத்துறை மூன்று தேசிய தொழில் முதலீட்டு நிறுவனங்களுடன் இணைந்து குப்பைகளை அகற்றுவதன் மூலம் ரூ.3,41,387/- வருவாய் ஈட்டியுள்ளது.
***
ANU/PKV/BS/AG/KPG
(Release ID: 1975692)
Visitor Counter : 103