மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், காந்திநகரில் ஆஸ்திரேலிய அமைச்சர்களுடன் இணைந்து ஆஸ்திரேலிய இந்திய கல்வி மற்றும் திறன் கவுன்சில் (ஏஐஇஎஸ்சி) கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே வலுவான அறிவுப் பாலங்களை ஏஐஇஎஸ்சி உருவாக்கும் – மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திரப் பிரதான்

Posted On: 06 NOV 2023 6:05PM by PIB Chennai

2023 நவம்பர் 3 முதல் 5 வரை புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட உலக உணவு இந்தியா - 2023 நிகழ்வில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் அரங்கத்தை,மத்திய  மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொண்டார். உலக உணவு இந்தியா 2023 நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி நவம்பர் 3-ம் தேதி தொடங்கி வைத்தார்.  நேற்று (நவம்பர் 5) நடைபெற்ற நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

கால்நடைப் பராமரிப்புத் துறையின் அரங்கில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் முக்கிய திட்டங்கள், புதிய முயற்சிகள் மற்றும் கால்நடை மற்றும் பால்பண்ணை துறையில் புதுமையான தொழில்நுட்பங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன. தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம், புத்தொழில் நிறுவனங்கள், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பண்ணை துறையில் செயல்படும் நிறுவனங்கள் உட்பட 20 அமைப்புகளின் செயல்திட்டங்கள் தொடர்பான விளக்கங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஊக்குவிப்பதிலும், துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உதவுவதிலும் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை இக்கண்காட்சி எடுத்துக்காட்டியது.

உலக உணவு இந்தியா 2023-ன் தொடக்க நாளில், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா வட்டமேஜை விவாதத்தில் பங்கேற்றார். இந்தக் கலந்துரையாடலில் உணவுப் பதப்படுத்துதல் மற்றும் அது சார்ந்த துறைகளில் செயல்படும் 70-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நவம்பர் 4-ஆம் தேதி, "பெண்களின் தலைமைத்துவத்தை ஊக்குவித்தல்: கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பண்ணைத் துறையில் பயனுள்ள மாற்றத்திற்கு சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தலை மேம்படுத்துதல்" என்ற தலைப்பிலான அறிவுசார் அமர்வை கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்தது. உணவு பதப்படுத்தும் தொழிலில், குறிப்பாக பால், இறைச்சி மற்றும் முட்டைகளின் உற்பத்தியில் பெண்களின் முக்கியத்துவம் மற்றும் மதிப்புமிக்க பங்களிப்புகளை எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த அமர்வு நடத்தப்பட்டது.

*************

(Release ID: 1975007)

ANU/PKV/PLM/KV மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர் திரு ஜேசன் கிளேரை காந்தி நகரில் இன்று சந்தித்து இருதரப்புப் பேச்சு நடத்தினார். தகுதிகளை பரஸ்பரம் அங்கீகரித்தல், கூட்டு பணிக்குழுவை நிறுவுதல், கூட்டு திறன் ஒத்துழைப்பு, கூட்டு பட்டங்களுக்கு ஹெச்...க்களிடையே ஒத்துழைப்பு, இந்தியாவின் கல்வியை சர்வதேசமயமாக்குதல், இந்திய மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான விசா தொடர்பான அம்சங்கள் போன்றவை குறித்து ஆஸ்திரேலிய அமைச்சருடன் திரு தர்மேந்திரப் பிரதான் பேசினார்.  இரு அமைச்சர்களும் கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவாக ஆய்வு செய்தனர்.

 

காந்திநகரில் ஆஸ்திரேலிய கல்வி  அமைச்சர் திரு ஜேசன் கிளேர் மற்றும் அந்நாட்டின் திறன்பயிற்சித்துறை  அமைச்சர் திரு பிரெண்டன் 'கானர் ஆகியோருடன் இணைந்து ஆஸ்திரேலிய இந்திய கல்வி மற்றும் திறன் கவுன்சில் (ஏஐஇஎஸ்சி) கூட்டத்திற்கு திரு தர்மேந்திரப் பிரதான் தலைமை வகித்தார்.

 

இந்தக் கூட்டத்தில் பேசிய திரு தர்மேந்திரப் பிரதான்ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு 2023-ம் ஆண்டு ஒரு மைல்கல் ஆண்டாகும் என்றார். கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்வலுவான அறிவுப் பாலங்களை உருவாக்குவதற்கும், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் பரஸ்பர முன்னுரிமைத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், மக்களுக்கு இடையிலான தொடர்புகளை அதிகரிப்பதற்கும் ஆஸ்திரேலியா-இந்தியா கல்வி மற்றும் திறன் கவுன்சில் கூட்டம் ஒரு ஊக்க சக்தியாக செயல்படும் என்று அவர் கூறினார்.

 

விவசாயம், நீர் மேலாண்மை, முக்கியமான கனிமங்கள், சுகாதாரம், செயற்கை நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற துறைகளில் ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பை எளிதாக்குவதற்காக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன என்று திரு தர்மேந்திரப் பிரதான் தெரிவித்தார்.

 

 

திரு ஜேசன் கிளேர் தமது உரையில், கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே தற்போது 450 ஆராய்ச்சி கூட்டு செயல்பாடுகள் உள்ளதாகக் குறிப்பிட்டார். அரசு, நிறுவன மற்றும் தொழில்துறை மட்டங்களில் மேலும் வலுப்படுத்துவது இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

 

***

 

Release ID: 1975103

 

PKV/PLM/KRS


(Release ID: 1975129) Visitor Counter : 138