நித்தி ஆயோக்
ஜி 20 புது தில்லி தலைவர்களின் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளபடி "நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல்" குறித்த பயிலரங்கை நித்தி ஆயோக் ஏற்பாடு செய்கிறது
Posted On:
05 NOV 2023 2:49PM by PIB Chennai
நித்தி ஆயோக் நாளை (நவம்பர் 6, 2023 -திங்கட்கிழமை) புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் " நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துதல்" என்ற பயிலரங்கை ஏற்பாடு செய்துள்ளது. மனித வள மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தப் பயிலரங்கம் நடத்தப்படுகிறது. ஜி 20 புது தில்லி தலைவர்கள் பிரகடனத்தில் கூறப்பட்ட 10 கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் ஐந்தாவது பயிலரங்கு இதுவாகும்.
பாட வல்லுநர்கள், சிந்தனைக் குழுவின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினர் முக்கிய தலைப்புகளில் விவாதிப்பார்கள். ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான முழுமையான அமர்வு இதில் நடைபெறும். பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்குதல், அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்தல், தரமான கல்வி வழங்குதல் ஆகியவை குறித்து இதில் விவாதிக்கப்படும்.
இந்தப் பயிலரங்கம் நேரடி மற்றும் காணொலி என இரண்டும் கலந்த முறையில் நடத்தப்படுகிறது. சிந்தனையாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் ஆர்வமுள்ள வட்டாரங்களின் மூத்த அதிகாரிகளும் காணொலி முறையில் இதில் இணைவார்கள்.
****
PKV/PLM/DL
(Release ID: 1974879)
Visitor Counter : 128