அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் ஆதரவுடன் காந்திநகரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் டிஎஸ்ஐஆர்-சிஆர்டிடிஎச் மாநாடு -2023, நாளை தொடங்குகிறது
Posted On:
05 NOV 2023 4:46PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறையான டிஎஸ்ஐஆர். நாட்டில் தொழில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் உள்நாட்டுத் தொழில்நுட்ப மேம்பாடு, பயன்பாடு மற்றும் பரிமாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. டிஎஸ்ஐஆர் அதன் பணிகளுக்காக "பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள்” எனப்படும் சிஆர்டிடிஹெச் என்ற சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது, இது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ), ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது.
2014-15 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சிஆர்டிடிஹெச் மையங்கள் திட்டம், தற்போது நாடு முழுவதும் 18 சிஆர்டிடிஹெச்-களுடன் வெற்றிகரமாக 10 வது ஆண்டில் நுழைந்துள்ளது. இவை தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்கின்றன.
இந்த முன்மாதிரியான பணிகள் மற்றும் சாதனைகள் குறித்து விளக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, டிஎஸ்ஐஆர்-சிஆர்டிடிஹெச் மாநாடு 2023 நவம்பர் 6 மற்றும் 7-ம் தேதிகளில் காந்திநகரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் நிறுவனத்தில் நடைபெறுகிறது. இதில் 18 சிஆர்டிடிஹெச்-களும் கலந்து கொண்டு தங்கள் சாதனைகளை வெளிப்படுத்துவார்கள். 2019 ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தில் (சிசிஎம்பி) டிஎஸ்ஐஆர் ஏற்கனவே இதுபோன்ற இரண்டு மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
இரண்டு நாள் நிகழ்வில் மொத்தம் ஐந்து தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெறும். முதல் நாளில் மூன்று அமர்வுகளும், 2 ஆம் நாளில் இரண்டு அமர்வுகளும் நடத்தப்படும். இதில் அவற்றுடன் தொடர்புடைய பல்வேறு சிஆர்டிடிஹெச்-கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் சவால்கள், கற்றல் மற்றும் வெற்றிக் கதைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறும். ஒவ்வொரு அமர்வும் ஒரு நிபுணரின் முக்கிய உரையுடன் தொடங்கும்.
****
PKV/PLM/DL
(Release ID: 1974876)
Visitor Counter : 113