அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கார்பன் டை ஆக்சைடை கார்பன் மோனாக்சைடாக மாற்றும் புதிய தொழில்நுட்பம் எஃகுத் துறையில் கரியமில வாயுக் குறைப்பு மற்றும் எரிசக்தி சேமிப்பிற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது

Posted On: 03 NOV 2023 12:26PM by PIB Chennai

கார்பன் டை ஆக்சைடை கார்பன் மோனாக்சைடாக மாற்றும் புதிய ஆற்றல் திறன் கொண்ட தொழில்நுட்பம் எஃகு துறையில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

2070 க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வுக்கான இந்தியாவின் இலக்கை அடையும் முயற்சிகளில், மும்பை ஐஐடி-யில் உள்ள தேசிய கார்பன் மையம்பல்வேறு புதுமையான, வழிமுறைகளை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, டாக்டர் அர்னாப் தத்தா மற்றும் டாக்டர் விக்ரம் விஷால் தலைமையிலான ஆய்வாளர்கள் குழு மற்றும் தேசிய மையத்தின் ஆராய்ச்சி மாணவர்கள், கார்பன் டை ஆக்சைடை கார்பன் மோனாக்சைடாக மாற்றும் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை பெற்றுள்ளனர்.

கார்பன் மோனாக்சைடு என்பது தொழில்துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருளாகும். எஃகுத் தொழிலில், வெடிப்பு உலைகளில் இரும்புத் தாதுக்களை உலோக இரும்பாக மாற்றுவதற்கு இது ஒரு இன்றியமையாத மூலப்பொருள் ஆகும். தற்போது, கோக் மற்றும் நிலக்கரியின்  ஆக்ஸிஜனேற்றத்தின் மூலம் கார்பன் மோனாக்சைட் உருவாக்கப்படுகிறது. கார்பன் டை ஆக்சைடை, கார்பன் மோனாக்சைடாக மாற்ற முடிந்தால், கார்பன் தடம் குறைவதுடன்  தொடர்புடைய செலவுகளும் குறையும். இந்தத் தொழில்நுட்பம் பல்வேறு தொழில்துறை பயன்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும்.

*****



(Release ID: 1974410) Visitor Counter : 145


Read this release in: English , Urdu , Hindi