நித்தி ஆயோக்

நிதி ஆயோக் ஜி 20 கருப்பொருள் ஊட்ட பயிலரங்குகளை நடத்துகிறது

Posted On: 31 OCT 2023 4:19PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) செப்டம்பர் 29 தேதியிட்ட "5 ஜி சுற்றுச்சூழல் மூலம் டிஜிட்டல் மாற்றம்" குறித்த ஆலோசனை அறிக்கை குறித்து பங்கெடுப்பாளர்களின் கருத்துகள், எதிர் கருத்துகளை கோரியது

 

பங்கெடுப்பாளர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி முறையே அக்டோபர் 30, நவம்பர் 13 என அறிவிக்கப்பட்டது.

 

பண்டிகைகள் காரணமாக அத்தியாவசிய தகவல்களை ஒருங்கிணைப்பதில் சிரமம் போன்ற பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு தொழில் சங்கங்களிடமிருந்து டிராய்க்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

 

ஆலோசனைக் கட்டுரைக்கு பதிலளிப்பதற்கு முன்பு உள்நாட்டில் விரிவான விவாதங்கள் தேவை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பங்கெடுப்பாளர்களின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு, எழுத்துப்பூர்வமான கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை நவம்பர் 27 வரையிலும், எதிர் கருத்துகளை டிசம்பர் 11ம் தேதி வரையிலும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

பங்கெடுப்பாளர்கள் தங்களது கருத்துகளை மின்னணு வடிவில் advadmn@trai.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் விளக்கம், மற்றும் தகவல்கள் தேவைப்படின், ஆலோசகர் (நிர்வாகம் மற்றும் ஐஆர்) திருமதி வந்தனா சேத்தி அவர்களை +91-11-23221509 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

(வெளியீட்டு ஐடி: 1973009)

 

AD/BS/KRSஜி20 புது தில்லி தலைவர்களின் பிரகடனத்தை செயல்படுத்துவதை அதிகரிக்கும் நோக்கில், நித்தி ஆயோக் ஜி20 புது தில்லி தலைவர்கள் பிரகடனத்தில் விவாதிக்கப்பட்ட பல்வேறு கருப்பொருள்கள் குறித்த பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு செய்ய உள்ளதுநவம்பர் 1ம் தேதி  முதல்  9ம் தேதி வரை இதுபோன்ற பத்து கருப்பொருள்  ஊட்ட  பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன.

 

 

ஜி20 முதல் ஜி21 வரை, வளர்ச்சிக்கான தரவுகள், சுற்றுலா, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, நிலையான வளர்ச்சி இலக்குகள், வர்த்தகம், இந்திய வளர்ச்சி மாதிரி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, பலதரப்பு மேம்பாட்டு வங்கிகளை சீர்திருத்துதல் மற்றும் காலநிலை நிதி மற்றும் பசுமை மேம்பாடு ஆகிய கருப்பொருள்களில் பயிலரங்குகள் நடைபெறும்

 

 

ஆழமான விவாதங்களை முன்னெடுப்பதற்கும், விமர்சன கருப்பொருள்களை பகுப்பாய்வு செய்வதற்கும், புது தில்லி தலைவர்களின் பிரகடனத்துக்கான முன்னோக்கிய பாதைக்கும் இந்த பட்டறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த  கருப்பொருள் ஊட்ட பட்டறைகள் புது தில்லி தலைவர்களின் பிரகடனத்திலிருந்து வெளிப்படும் பல்வேறு முக்கியமான கருப்பொருள்களை விரிவுபடுத்தும்.

 

ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் பெற்ற பல்வேறு சிந்தனைக் குழுக்களுடன் இணைந்து இந்த பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன. .ஆர்.எஃப், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம், இந்தியா அறக்கட்டளை, இந்திய மென்பொருள் பொருட்கள் தொழில் வட்டமேஜை , சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையம், மனிதவள மேம்பாட்டு நிறுவனம் , இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம், .ஜி.ஆர். அறக்கட்டளை, பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான வாட் ஒர்க்ஸ் நிறுவனம் , சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்த ஆராய்ச்சிக் கழகம், சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆகிய சிந்தனைக் குழுக்கள் பங்கேற்கின்றன. இந்த பயிலரங்குகள் நித்தி ஆயோக்கின் துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களால் ஒவ்வொரு கருப்பொருளிலும் வழிகாட்டப்படுகின்றன.

 

முக்கியமாக, ஒவ்வொரு கருப்பொருள் பட்டறையும் 10-12 பக்க விளைவு ஆவணத்தை உருவாக்கும், இது புது தில்லி தலைவர்கள் பிரகடனத்தை செயலாக்கத்திற்கான செயல்பாட்டு சிக்கல்களை உள்ளடக்கியது. இந்த ஆவணத்தில் ஜி 20 விநியோகங்கள் மற்றும் பின்தொடர்தல் நடவடிக்கைகள் பற்றிய விரிவான பகுப்பாய்வு அடங்கும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்;

 https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1973373

 

AD/BS/KRS



(Release ID: 1973528) Visitor Counter : 85


Read this release in: English , Urdu , Hindi , Telugu