பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் காந்திநகரில் உள்ள ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையின் கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை தாங்கினார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2023 9:17PM by PIB Chennai

குஜராத்தின் காந்திநகரில் உள்ள ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையின் கூட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் செயல்பாடுகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தார்.

யாத்திரையின் அனுபவத்தை எப்போதும் மறக்க முடியாததாக மாற்றுவதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கோயில் வளாகத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதையும் அவர் ஆய்வு செய்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

காந்திநகரில் நடைபெற்ற ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினேன்அறக்கட்டளையின் செயல்பாடுகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தோம். யாத்திரையின் அனுபவத்தை எப்போதும் மறக்க முடியாததாக மாற்றுவதற்கு, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கோயில் வளாகத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை ஆய்வு செய்தோம். அறக்கட்டளையால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சுற்றுச்சூழலுக்கு உகந்த  நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தேன்.”

******

ANU/SMB/BR/KPG

 


(வெளியீட்டு அடையாள எண்: 1973271) வருகையாளர் எண்ணிக்கை : 167