கலாசாரத்துறை அமைச்சகம்
'குப்பையில் இருந்து கலை – கழிவில் இருந்து சிற்பம்' என்ற கண்காட்சியை மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
29 OCT 2023 6:48PM by PIB Chennai
சிறப்பு தூய்மை இந்தியா இயக்கத்தின் 3-வது கட்டத்தின் ஒரு பகுதியாக, கலாச்சார அமைச்சகத்தால் புதுதில்லியில் உள்ள லலித் கலா அகாடமியில் ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சகத்தின் பல்வேறு அமைப்புகளின் சிறந்த முன்முயற்சிகளை வெளிப்படுத்தும் வகையில் 'குப்பையில் இருந்து கலை – கழிவில் இருந்து சிற்பம்' என்ற தலைப்பில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியை மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால் இன்று (29-10-2023) தொடங்கி வைத்தார். இக்கண்காட்சி 2023 அக்டோபர் 31 ஆம் தேதி வரை நடைபெறும்.
மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் வடகிழக்கு மண்டல கலாச்சார மையத்தின் (என்.இ.இசட்.சி.சி) அமைப்புகள் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. அதே நேரத்தில் தில்லிக்கு வெளியே உள்ள பிற அமைப்புகளும் அந்தந்த அலுவலகங்களில் இது போன்ற கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
***
Release ID=1972849
AD/PLM/KRS
(रिलीज़ आईडी: 1972865)
आगंतुक पटल : 159