சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மாற்றுத்திறனாளிகளின் கலைப்பொருள் கண்காட்சி-2023 பெங்களூருவில் நாளை தொடங்குகிறது
Posted On:
26 OCT 2023 3:43PM by PIB Chennai
மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி தொழில்முனைவோர்/ கைவினைஞர்களின் தயாரிப்புகள் மற்றும் கைவினைத்திறனை வெளிப்படுத்தும் திவ்ய கலா மேளாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மாற்றுத் திறனாளி தொழில்முனைவோருக்கு அதிகாரமளிக்கும் முயற்சிகளைத் தொடர, 2023, அக்டோபர் 27 முதல் நவம்பர் 5, வரை கர்நாடகாவின் பெங்களூரு, எச்எம்டி கிரவுண்ட் ஜலஹள்ளி பிரதான சாலையில் திவ்ய கலா மேளாவு நடைபெற உள்ளது. சமூக நீதி, அதிகாரமளித்தல் மத்திய அமைச்சர் திரு ஏ. நாராயணசாமி, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் திருமதி பிரதிமா பௌமிக் ஆகியோர் 27ம் தேதி மாலை 6:00 மணிக்குத் தொடங்கி வைக்கின்றனர். மேலும் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர்.
ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பான தயாரிப்புகள் ஒரே இடத்தில் காணப்படுவதால், இந்த நிகழ்வு பார்வையாளர்களுக்கு கவர்ச்சிகரமான அனுபவத்தை வழங்கும். சுமார் 20 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 100 மாற்றுத்திறனாளி கைவினைஞர்கள் / கலைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர் பெங்களூரில் தங்கள் தயாரிப்புகள் மற்றும் திறன்களை காட்சிப்படுத்த உள்ளனர். வீட்டு அலங்காரப் பொருட்கள், ஆடை, எழுதுபொருள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகள், தொகுக்கப்பட்ட உணவு மற்றும் இயற்கைப் பொருட்கள், பொம்மைகள் மற்றும் பரிசுப் பொருட்கள், தனிப்பட்ட அணிகலன்கள் -நகைகள், பைகள், ஓவியங்கள் போன்ற தயாரிப்புகள் இருக்கும். இது 'உள்ளூர்ப் பொருட்களை வாங்க அனைவருக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும். மேலும் மாற்றுத்திறனாளி கைவினைஞர்கள் தங்கள் கூடுதல் உறுதியுடன் தயாரித்த தயாரிப்புகளைக் கண்டு வாங்கலாம்.
10 நாட்கள் நடைபெறும் 'திவ்ய கலா மேளா', காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும்.
2023-2024 ஆம் ஆண்டில் இந்த திவ்ய கலா மேளா 12 நகரங்களில் ஏற்பாடு செய்யப்படும்.
***
(Release ID: 1971482)
ANU/SMB/IR/RS/KRS
(Release ID: 1971661)
Visitor Counter : 132