எரிசக்தி அமைச்சகம்
மின்சார அமைச்சகத்தில் 3.0 சிறப்பு பிரச்சாரம் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் நடத்தப்படுகிறது
प्रविष्टि तिथि:
21 OCT 2023 4:43PM by PIB Chennai
மின்சார அமைச்சகம் அதனுடன் இணைந்த மற்றும் சார்பு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதன் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பிற அமைப்புகளும் 3.0 சிறப்பு பிரச்சாரத்தில் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பங்கேற்று வருகின்றன. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இதே கருப்பொருளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களைப் போல, தூய்மையை மேம்படுத்தவும், நிலுவையில் உள்ள குறிப்புகளைத் தீர்க்கவும் இந்தப் பிரச்சாரம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறப்பு பிரச்சாரம் 3.0 சேவை வழங்கலுக்கு பொறுப்பான கள மற்றும் வெளியூர் அலுவலகங்களை மையமாகக் கொண்டு செய்யப்படுகிறது.
இந்தப் பிரச்சாரம் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீடிக்கும். இந்தப் பிரச்சாரத்தின் போது, மின்சார அமைச்சகம் தூய்மையில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது, அலுவலகங்களில் பணியிடத்தை மேம்படுத்துதல் மற்றும் மக்களிடையே தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொண்டுள்ளது. இதுவரை, அமைச்சகம் குப்பை அகற்றுதல் மூலம் ரூ.9.73 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. 67,400 சதுர அடி அலுவலக இடம் விடுவிக்கப்பட்டு, 4,600 கோப்புகள் களையெடுக்கப்பட்டுள்ளன. 29 நிர்வாக செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் 245 தூய்மை பிரச்சாரங்கள் நடத்தப்பட்டுள்ளன.
***
ANU/AD/PKV/DL
(रिलीज़ आईडी: 1969758)
आगंतुक पटल : 143