பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறையில் தூய்மை பணி சிறப்பு முகாம் 3.0 முழு வீச்சில் நடைபெற்று வருகிறது
Posted On:
21 OCT 2023 9:31AM by PIB Chennai
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறையின் சார்பில் தூய்மை பணியை முன்னெடுத்தல், பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணுதல், டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவித்தல் மற்றும் நல்லாட்சி முயற்சிகள் மூலம் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக சிறப்பு இயக்கம் 3.0 இன் ஒரு பகுதியாக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
ஓய்வூதியதாரர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மற்றும் மேல்முறையீடுகளுக்கு தீர்வு காண்பதில் இத்துறை குறிப்பிடத்தக்க முன் நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தின்3வதுவாரம் வரை நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குறைகள் மற்றும் சுமார் 500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்; https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1969610
***
ANU/PKV/BS/DL
(Release ID: 1969661)
Visitor Counter : 111