நிதி அமைச்சகம்

கௌடில்யா பொருளாதார மாநாட்டின் தொடக்க விழாவில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்

டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலம் அதிக வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தி, மக்களுக்கு இந்தியா அதிகாரம் அளிக்கிறது: நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்

Posted On: 20 OCT 2023 6:38PM by PIB Chennai

மத்திய நிதியமைச்சகத்துடன் இணைந்து பொருளாதார வளர்ச்சி நிறுவனம் புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த கௌடில்ய பொருளாதார மாநாடு -2023-ல் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று (20-10-2023) உரையாற்றினார்.

 

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சாதனைகளைக் குறிப்பிட்ட நிதியமைச்சர், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியாவின் வெற்றியையும், அதன் விளைவாக நாட்டில் அனைவருக்கும் நிதிச் சேவைகள் கிடைப்பதையும் எடுத்துரைத்தார். பருவநிலை நிதி மற்றும் உலகளாவிய பயங்கரவாதம் போன்ற முக்கியமான உலகளாவிய பிரச்சினைகளை சமாளிக்க உறுதியான முயற்சிகள் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.  

 

இந்தியாவின் தமைமைத்துவத்தின் கீழ் உள்ள ஜி20, நிதிசார் நடவடிக்கைகளின் முக்கிய அம்சங்களையும் அவர் எடுத்துரைத்தார். உலகம் முழுவதும் பயங்கரவாதத்தின் தாக்கம் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். பயங்கரவாதத்தால் நிச்சயமற்ற தன்மை ஏற்படும் என்றும் அதனால், முதலீடுகள் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

டிஜிட்டல்மயமாக்கல் மூலம் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.  டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலம் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த முடியும் என்றும் மக்களுக்கு அதிகாரம் அளிக்க டிஜிட்டல் மயமாக்கலை விட சக்திவாய்ந்த கருவி எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

 

ஜன்தன் வங்கி கணக்குகள் நாட்டில் நிதி உள்ளடக்கத்தை கொண்டு வருவதற்கான மிகப்பெரிய கருவியாகும் என்று அவர் தெரிவித்தார். ஜன்தன் கணக்குகளில் தற்போது மொத்தம் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  

 

இந்தியாவின் ஜி20  தலைமைத்துவத்தின் கீழ், மேற்கொள்ளப்பட்ட பணிகளை எடுத்துரைத்த திருமதி நிர்மலா சீதாராமன், ஜி20 நிதி செயல்திட்டங்கள் உலகளாவிய தேவைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று கூறினார்.

 

Release ID: 1969491

AD/PLMN/KRS

*******



(Release ID: 1969580) Visitor Counter : 148


Read this release in: English , Urdu , Hindi , Marathi