சுரங்கங்கள் அமைச்சகம்

3.0 சிறப்பு இயக்கத்தின் கீழ் பொதுமக்களின் குறைகளுக்கு சுரங்க அமைச்சகம் 100% தீர்வுகண்டுள்ளது

Posted On: 16 OCT 2023 5:26PM by PIB Chennai

சுரங்க அமைச்சகம், அதன் கள அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ் விதிகள் / செயல்முறைகளைத் தளர்த்துதல், பதிவேடு மேலாண்மை, பொதுமக்களின் குறைகள் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் பணியிட அனுபவத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட நிலுவையில் உள்ள விவகாரங்களுக்குத் தீர்வுகாண இலக்கு நிர்ணயித்துள்ளன.

நிலுவையில் உள்ள குறிப்புகளுக்குத் தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு முயற்சிகள் மூலம், பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வுகண்டுஅமைச்சரவை பரிந்துரைகள் மற்றும் மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளை 100சதவீதம் நிறைவு செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிரதமர் அலுவலகப் பரிந்துரைகளில் 100 சதவீதம் அளவுக்கு நிறைவேற்றும் தருவாயில் உள்ளது. 

இயற்கை சூழலை ஏற்படுத்தும் வகையில் அமைச்சகமும் அதன் கள அமைப்புகளும் உரக்குழிகளை உருவாக்குதல், மூலிகை தோட்டங்களை உருவாக்குதல், ஏரிகளைத் தூய்மைப்படுத்துதல், நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள அதன் ஊழியர்களுக்கு வெளிப்புற பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்தித் தருதல்  ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளன.

பதிவு மேலாண்மையின் கீழ்அமைச்சகம் நேரடி கோப்புகளை மதிப்பாய்வு செய்வதற்கான அதன் இலக்கில் 63%-ஐ எட்டியுள்ளது மற்றும் இதுவரை 2000-க்கும் அதிகமான மின்-கோப்புகள் மூடப்பட்டுள்ளன. நேரடி கோப்புகளை அகற்றுவதற்கான முயற்சியின் விளைவாக மொத்தமாக  சுமார் 29,050 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டுள்ளது. அலுவலக இடவசதி மற்றும் கழிவுப் பொருட்களை அகற்றியதன் மூலம் இதுவரை ரூ.13,08,406 வருவாய் கிடைத்துள்ளது.

சிறப்பு நடவடிக்கையாக, கடந்த இயக்க காலத்தின் இ-அலுவலக ஸ்கேன் செய்யப்பட்ட கோப்புகளை இ-அலுவலகத்தில் வைக்கும் பணியை சுரங்க அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. 3.0 சிறப்பு இயக்கத்தின் போது இதுவரை சுமார் 4,000 ஸ்கேன் செய்யப்பட்ட கோப்புகள் மின்-கோப்பாக இ-அலுவலகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அக்டோபர் 14ஆம் தேதி வரை, நாடு முழுவதும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 344 தூய்மை இயக்கங்களில் 210 இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இந்த இயக்க கட்டத்தில் 100% சாதனையை அடைய அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.

***

ANU/SMB/IR/AG/KPG



(Release ID: 1968194) Visitor Counter : 93