விவசாயத்துறை அமைச்சகம்
அரசுடன் ஒத்துழைக்கவும், நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளவும், வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப்களிடம் இருந்து வேளாண்துறை அமைச்சகம் முன்மொழிவுகளை கோருகிறது
Posted On:
14 OCT 2023 3:44PM by PIB Chennai
தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றங்கள் மற்றும் புதுமையான நடைமுறைகளால் உந்தப்பட்டு, இந்தியாவின் விவசாயத் துறை ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.
வேளாண் ஸ்டார்ட் அப்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட தனியார் துறை நிறுவனங்களின் கணிசமான செயல்பாடுகளால் இந்த பரிணாமம் மேலும் விரைவுபடுத்தப்படுகிறது.
ஒரு வலுவான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் ஒருங்கிணைப்பு, இன்டர்நெட் ஆஃப் திங்ஸின் திறனைப் பயன்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் ஆகியவை ஏற்கனவே இந்த களத்தில் நம்பிக்கைக்குரிய விளைவுகளை நிரூபித்துள்ளன.
விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நலனுக்காக, வேளாண் தொழில்நுட்பத் துறையில் அபரிமிதமான வளர்ச்சியை சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதிசெய்ய, உத்திசார்ந்த நடவடிக்கைகளையும் முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
இந்த கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துவதற்காக, வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.எஸ்.சி, ஐ.ஐ.எஸ்.இ.ஆர் போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களைச் சேர்ந்த துறை வல்லுநர்களைக் கொண்ட ஒரு பரிசீலனைக் குழுவை அமைத்துள்ளது.
விவசாயிகளின் நல்வாழ்வை நேரடியாக பாதிக்கும் புதுமையான தீர்வுகளை இந்தக் குழு மதிப்பீடு செய்யும். ஆர்வமுள்ள நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வமுள்ள நிறுவனங்கள் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வலைத்தளத்தில் www.agricoop.gov.in பதிவேற்றப்பட்டுள்ள படிவத்தை வரும் 31ம் தேதி காலை 10 மணிக்குள் பதிவிறக்கம் செய்யலாம். முன்மொழிவுகளை 18ஆம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் சமர்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு; https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1967675
***
ANU/AD/BS/DL
(Release ID: 1967711)