விவசாயத்துறை அமைச்சகம்

வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை 2023, அக்டோபர் 2 முதல் 7 வரை மேற்கொண்ட சிறப்பு முகாம் 3.0

Posted On: 12 OCT 2023 11:58AM by PIB Chennai

மத்திய அரசின் சிறப்பு இயக்கம் 3.0-ல் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை தீவிரமாக பங்கேற்று வருகிறது. துறை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அலுவலகம் / தன்னாட்சி அமைப்புகள் மற்றும் அவற்றின் கள அலுவலகங்கள் தங்கள் அலுவலகங்கள் / வளாகங்களில் தூய்மையைப் பராமரிப்பது, பணியிட அனுபவங்களை மேம்படுத்துவது ஆகியவற்றில்  கவனம் செலுத்தி வருகிறது.

வேளாண் அறிவியல் மையங்கள், அதன் பிராந்திய அலுவலகங்கள், வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியம், மூன்று மத்திய வேளாண் பல்கலைக்கழகங்கள், அவற்றின் கல்லூரிகள் உள்ளிட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம்  ஆகியவை நாடு முழுவதும் சிறப்பு இயக்கத்தை நடத்தி வருகின்றன. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ம் தேதி முதல் பல்வேறு பிரிவுகளின் கீழ் இலக்குகள் அடையாளம் காணப்பட்டு தூய்மைப்படுத்துவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. பதிவேடு மேலாண்மை, நேரடி கோப்புகளைக் களையெடுப்பதன் மூலம் இட விவசாயிகளுடன் கிராமங்களில் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அலுவலகங்கள் / வளாகங்களில் பணியிட அனுபவத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

 

இத்துறை 19843 நேரடி கோப்புகள் மற்றும் 4717 மின் கோப்புகளை சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ் பரிசீலனைக்காக அடையாளம் கண்டுள்ளது. இவற்றில் இதுவரை 6279 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.  4171 நேரடிக் கோப்புகள் இந்த இயக்கத்தின் போது அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. 4717 மின்னணு கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 1465 கோப்புகளை நீக்குவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், 2023 அக்டோபர் 2 முதல் 31 வரை 3326 "தூய்மை குறித்த சிறப்பு இயக்கம்" என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதில் இதுவரை 690 'தூய்மை இயக்கங்கள்'  நடத்தப்பட்டுள்ளன. சுமார் 34,886 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டு ரூ.10,35,731/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. துறை நிர்ணயித்த இலக்குகளை அடைவதற்காக இந்த இயக்கம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 2023 அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் அனைத்து நிலுவைப் பணிகளையும் நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார், மேலும் இயக்கத்தின் இலக்குகளை அடைய தங்களின் சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை ஊக்குவித்துள்ளார். இந்த இயக்கம் 2023 அக்டோபர் 31 வரை தொடரும்.

*****

 ANU/SMB/IR/KPG/GK



(Release ID: 1967037) Visitor Counter : 106


Read this release in: Urdu , English , Hindi