திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திறன் மாணவர்களுக்கான திறன் பட்டமளிப்பு விழாவிற்கு நாளை திறன் இந்தியா ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 11 OCT 2023 3:44PM by PIB Chennai

21-ம் நூற்றாண்டல் கற்போரின் விருப்பங்களுக்கு ஏற்ப திறன் அடிப்படையிலான கல்வியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், திறன் இந்தியாவின் பல்வேறு திட்டங்களின் கீழ் பயிற்சி முடித்த மாணவர்களை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையில் திறன் இந்தியா ஒரு பிரமாண்டமான 'திறன் பட்டமளிப்பு விழாவுக்கு' ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமரின் திறன் மையம், தொழிற்பயிற்சி நிறுவனங்கள், தொழிற்பழகுநர்கள் திறன் இந்தியா சர்வதேச மையம் உள்ளிட்ட மதிப்புமிக்க திறன் மேம்பாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பார்கள் .

 

இந்த விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி மாணவர்களிடையே நேரலையில் உரையாற்ற உள்ளார். கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகின்றனர்.

 

இது குறித்து  பேசிய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் திரு அதுல் குமார் திவாரி, "நமது ஆற்றல்மிக்க மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்களின் திறன்களை கவனம் செலுத்தும் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மூலம் பயன்படுத்த வேண்டும். இந்தப் பட்டமளிப்பு விழா ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய திறன் சூழலை உருவாக்குவதற்கு நமது தொடர்ச்சியான பணியை நிரூபிக்கிறது. தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் தேசிய மேம்பாட்டிற்கு பங்களிக்க மாணவர்களை ஊக்குவிக்கும். இது மாணவர்களின் மன உறுதியை மேலும் அதிகரிக்கவும், அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க அவர்களை ஊக்குவிக்கவும் உதவும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறினார்.

 

இந்த மாணவர்கள் உதவி கணினி செயல்பாட்டாளர், யுஐ / யுஎக்ஸ் டெவலப்பர், தரவு விஞ்ஞானி, சமூக ஊடக திட்டமிடல் நிபுணர், அழகு பராமரிப்பு உதவியாளர், சுரங்க சர்வேயர், வீட்டுப் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் திறன் பயிற்சி பெற்றுள்ளனர்.

***


(Release ID: 1966607)

SMB/ANU/IR/RS/KRS


(Release ID: 1966788) Visitor Counter : 153


Read this release in: English , Urdu , Hindi , Assamese