சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இலக்குப் பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான உறைவிடக் கல்வித்திட்டம் (ஷ்ரேஷ்டா)

Posted On: 09 OCT 2023 12:20PM by PIB Chennai

உயர்தரக் கல்வியை வழங்கும் மானிய உதவி நிறுவனங்கள், உறைவிட உயர்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றின் முயற்சிகள் மூலம் கல்வித் துறையில் சேவைக் குறைபாடுள்ள ஆதிதிராவிடர்கள்  பெருமளவில் உள்ள பகுதிகளில் காணப்படும் இடைவெளியை நிரப்புவதும், ஆதிதிராவிடர்களின் சமூகப் பொருளாதார மேம்பாடு மற்றும் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கான சூழலை வழங்குவதும் ஷ்ரேஷ்டாவின் நோக்கமாகும். இத்திட்டம் மேலும் மாற்றியமைக்கப்பட்டு, நாட்டின் தலைசிறந்த பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவ, மாணவியரின் கல்வி மற்றும் முழுமையான மேம்பாட்டிற்காகவும், அவர்களின் எதிர்கால வாய்ப்புகளை உறுதி செய்வதற்காகவும் இத்திட்டம் மேலும் மாற்றியமைக்கப்படுகிறது.

இத்திட்டம் இரண்டு முறைகளில் செயல்படுத்தப்படுகிறது: ஒன்று ஷ்ரேஷ்டா பள்ளிகள், (சிறந்த சிபிஎஸ்இ / மாநில வாரியத்துடன் இணைக்கப்பட்ட தனியார் உறைவிடப் பள்ளிகள்), இதன் கீழ், ஒவ்வொரு ஆண்டும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் திறமையான ஆதிதிராவிட மாணவர்கள் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் ஷ்ரெஷ்டாவுக்கான தேசிய நுழைவுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சிபிஎஸ்இ / மாநில வாரியத்தால் இணைக்கப்பட்ட சிறந்த தனியார் உறைவிடப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு வரை கல்வியைத்  தொடர்வதற்காக 9 மற்றும் 11ஆம்வகுப்புகளில் சேர்க்கப்படுவார்கள்.

பள்ளிகள் தேர்வு: கடந்த மூன்று ஆண்டுகளாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 75% க்கும் அதிகமான தேர்ச்சி விகிதத்தைக் கொண்ட சிபிஎஸ்இ அடிப்படையிலான தனியார் உறைவிடப் பள்ளிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களைச் சேர்ப்பதற்கான குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

மாணவர்கள் தேர்வு: பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் வரை உள்ள ஆதிதிராவிட மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேசியத் தேர்வு முகமை நடத்தும் தேசிய அளவிலான தேர்வு மூலம் சுமார் 3000 (9ஆம்வகுப்புக்கு 1500 மற்றும் 11ஆம்வகுப்புக்கு 1500) மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

பள்ளிக் கட்டணம் (கல்விக் கட்டணம் உட்பட) விடுதிக் கட்டணம் (உணவு கட்டணம் உட்பட) ஆகியவற்றை உள்ளடக்கிய மாணவருக்கான மொத்தக்கட்டணத்தை இத்துறை ஏற்கும்.

 9-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.1,00,000, 10-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.1,10,000, 11-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.1,25,000, 12-ம் வகுப்பு மாணவருக்கு ரூ.1,35,000,  ஒதுக்கப்படுகிறது.

2020-21 முதல் 2023-24 வரை இலக்குப் பகுதிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான உறைவிடக் கல்வித் திட்டத்தின் கீழ் செலவினங்கள்:

2020-21-ஆம் ஆண்டு 38,250 பயனாளிகளுக்கு ரூ.56.05 கோடியும், 2021-22-ஆம் ஆண்டு 20,435 பயனாளிகளுக்கு ரூ.38.04 கோடியும், 2022-23-ஆம் ஆண்டு 16,479 பயனாளிகளுக்கு ரூ.51.12 கோடியும் ஒதுக்கப்பட்டது. 2023-24-ஆம் ஆண்டு 10.09.2023 வரை  1,185 பயனாளிகளுக்கு ரூ.14.94 கோடி ஒதுக்கப்பட்டது.

 

***

ANU/SMB/IR/AG/KPG

 


(Release ID: 1965953) Visitor Counter : 114