புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
கபுர்தலாவில் உள்ள எஸ்.எஸ்.எஸ் - என்.ஐ.பி.இ.யில் உயிரி ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த சர்வதேச மாநாடு, 2023 அக்டோபர் 9 முதல் 12 வரை நடைபெறுகிறது
Posted On:
07 OCT 2023 4:43PM by PIB Chennai
இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (எம்.என்.ஆர்.இ) கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான சர்தார் ஸ்வரண் சிங் தேசிய உயிரி எரிசக்தி நிறுவனம் (எஸ்.எஸ்.எஸ் - என்.ஐ.பி.இ) 2023 அக்டோபர் 9 முதல் 12 வரை "உயிர் ஆற்றல் ஆராய்ச்சியில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த சர்வதேச மாநாடு - 2023"-ஐ (ஐ.சி.ஆர்.ஏ.பி.ஆர் - 2023) நடத்துகிறது. பஞ்சாபின் கபுர்தலாவில் உள்ள நிறுவன வளாகத்தில் இந்த சர்வதேச மாநாட்டின் நான்காவது பதிப்பு நடைபெறுகிறது. இந்த மாநாடு அரசுத்துறைகள், தொழில்துறையினர், கல்வித் துறையினர் மற்றும் உயிரி எரிசக்தி துறையினரை ஒருங்கிணைக்கிறது.
உயிரி வள மேலாண்மை; பயோமாஸ் - கழிவுகளை எரிசக்தியாக மாற்றுதல்; பயோமாஸ் வீரியமாக்கல், கழிவு முதல் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் வரையிலான தயாரிப்புகள், உயிரி ஆற்றல் அமைப்பின் மாதிரிப்படுத்தல், மற்றும் உயிரி சுத்திகரிப்பு மற்றும் உயிரி ஹைட்ரஜன் போன்றவை இந்த மாநாட்டின் பரந்த கருப்பொருள்களாக இருக்கும். இந்த மாநாட்டு கருப்பொருள்கள் குறித்து முழுமையான மற்றும் தொழில்நுட்ப அமர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ரசாயனம் மற்றும் உரத் துறை இணையமைச்சர் திரு பகவந்த் குபா தொடங்கி வைக்கிறார். புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் தேசிய உயிர்சக்தி திட்டத்திற்கான விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு இயக்கத்தையும் அமைச்சர் தொடங்கி வைக்கிறார். புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைச் செயலாளர் திரு பூபிந்தர் சிங் பல்லா மற்றும் ஐ.ஐ.டி ரூர்க்கியின் இயக்குநர் பேராசிரியர் கே.கே.பந்த் ஆகியோரும் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர்.
மாநாடு குறித்த கூடுதல் தகவல்களை மாநாட்டு இணையதளமான https://www.icrabr.com/ என்ற தளத்தில் காணலாம்.
***
ANU/PKV/PLM/DL
(Release ID: 1965511)
Visitor Counter : 87