நிதி அமைச்சகம்

சிறு தானிய மாவுக்கு வரிவிலக்கு 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை


வெல்லப்பாகு மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைகிறது

Posted On: 07 OCT 2023 4:58PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் 52 வது ஜிஎஸ்டி கவுன்சில் இன்று புதுதில்லியில் கூடியது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதித்துறையை வகிக்கும் கோவா மற்றும் மேகாலயா முதலமைச்சர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றங்கள், வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் ஜிஎஸ்டியில் இணக்கங்களை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் பின்வரும் பரிந்துரைகளை அளித்தது.

1. பொருட்களின் ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றங்கள்

70% சிறுதானியங்களைக் கொண்ட சிறுதானிய மாவால் செய்யப்பட்ட உணவுப்பொருள்பாக்கெட் இல்லாமல்  விற்பனை செய்யப்படும் சிறுதானிய மாவு ஆகியவற்றுக்கு முற்றிலும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

70% சிறுதானியங்களைக் கொண்ட சிறுதானிய மாவை பாக்கெட் செய்யப்பட்ட அல்லது லேபிள் செய்யப்பட்ட வடிவத்தில் விற்கப்பட்டால் 5% வரி விதிக்கப்படும்.

உலோகமயமாக்கப்பட்ட பாலியெஸ்டர் பிலிம், பிளாஸ்டிக் பிலிமில்  தயாரிக்கப்படும் இமிடேஷன் ஜரிகை நூல் அல்லது நூல் 5% ஜி.எஸ்.டி வரியை ஈர்க்கும் இமிடேஷன் ஜரிகை நூல் அல்லது நூலுக்கான நுழைவு மூலம் இது  உள்ளடக்கப்படுகிறது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.. இருப்பினும், மறுமார்க்கத்தில் பாலியெஸ்டர் பிலிம் (உலோகமயமாக்கப்பட்ட) / பிளாஸ்டிக் பிலிம் மீது பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கப்படாது.

வெளிநாட்டுக் கொடியைக் கொண்ட  கப்பல்களுக்கு , ஆறு மாதங்களில் அது வெளிநாட்டிற்கு செல்லும் கப்பலாக மாற்றப்படுவதற்கு உட்பட்டு கரையோர ஓட்டத்திற்கு மாறலாம் என்ற .நிபந்தனையுடன் கூடிய ஐஜிஎஸ்டி விலக்கு பரிந்துரைக்கப்படுகிறது

2. பொருட்கள் தொடர்பான பிற மாற்றங்கள்

மனித நுகர்வுக்கான மதுபானம் தயாரிக்க பயன்படும் கூடுதல் நடுநிலை ஆல்கஹாலை ஜிஎஸ்டி வரம்புக்கு அப்பால் வைத்திருப்பது என்று பரிந்துரைக்கப்படுகிறது. இந்த விஷயத்தில்  கூடுதல் நடுநிலை ஆல்கஹாலுக்ககு விலக்கு அளிப்பது குறித்து பொருத்தமான திருத்தத்தை சட்டக் குழு பரிசீலிக்கும்.

வெல்லப்பாகு மீதான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இந்த நடவடிக்கை ஆலைகளில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதோடு, கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகையை விரைவாக வழங்கவும் உதவும். இதன் மூலம் கால்நடை தீவனம் தயாரிப்பதற்கான செலவும் குறையும்,

3. சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றங்கள்

குடிநீர் வழங்கல், பொது சுகாதாரம், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை மற்றும் குடிசைப்பகுதி மேம்பாடு மற்றும் மேம்பாடு ஆகிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.

***

ANU/PKV/BS/DL



(Release ID: 1965510) Visitor Counter : 219