அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
என்.எம்-ஐ.சி.பி.எஸ் திட்டம் அனைத்து மட்டங்களிலும் குறிப்பிடத்தக்க முடிவுக்கு வழிவகுத்தது; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர்
Posted On:
07 OCT 2023 9:45AM by PIB Chennai
சைபர்-இயற்பியல் அமைப்புகளில் தொழில்நுட்ப புத்தாக்கத்தின் 3 வது தேசிய பட்டறையில், தொழில்நுட்ப மாற்றத்தை கொண்டு வருவதற்காக, பல்துறை சைபர்-இயற்பியல் அமைப்புகள் (என்.எம்-ஐ.சி.பி.எஸ்) பற்றிய தேசிய இயக்கத்தின் கீழ் நிறுவப்பட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையங்களின் (டி.ஐ.எச்) முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
"நாட்டின் சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் 25 இடங்களில் இந்த இயக்கத்தின் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் அவை விவசாயம், எரிசக்தி, நீர், போக்குவரத்து போன்ற சைபர்-இயற்பியல் அமைப்புகளின் அனைத்து முக்கிய அம்சங்களிலும் பணியாற்றி வருகின்றன.
4 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் பணி ஒரு குறிப்பிடத்தக்க முடிவுக்கு வழி வகுத்திருப்பதைக் காணலாம். உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளின் அடிப்படையில் மட்டுமல்லாமல், அறிவியல் வெளியீடுகளிலும் இதனைக் காணலாம் என பயிலரங்கின் நிறைவு அமர்வில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (டி.எஸ்.டி) செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர் கூறினார்.
முக்கியமான துறைகளில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதில் தொழில்நுட்பத்தின் மாற்றங்களை நடைமுறைக்கு கொண்டு வருமாறு மையத்துடன் தொடர்புடைய தொழில்நுட்ப வல்லுநர்களை அவர் வலியுறுத்தினார்.
இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் சைபர் பாதுகாப்பு தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையமான சி3ஐஹப், சைபர்-இயற்பியல் அமைப்புகளில் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு குறித்த 3 வது தேசிய பயிலரங்கை நடத்தியது. இந்தப் பயிலரங்கை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பலதுறை சைபர்-இயற்பியல் அமைப்புகள் (என்.எம்-ஐ.சி.பி.எஸ்) தேசிய இயக்கத்தின் கீழ் ஏற்பாடு செய்தன.
***
ANU/PKV/BS/DL
(Release ID: 1965362)
Visitor Counter : 122