சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
உலக டிஸ்லெக்ஸியா தினம் 2023, அக்டோபர் 08 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது
प्रविष्टि तिथि:
06 OCT 2023 12:19PM by PIB Chennai
உலக டிஸ்லெக்ஸியா தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. டிஸ்லெக்ஸியா என்பது பொதுவாக கற்றலில் ஏற்படும் குறைபாடாகும். இது படிப்பு மற்றும் எழுதும் திறனைப் பாதிக்கிறது. இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு சரளமாக வாசிப்பதும், எழுதுவதும் சவாலான விஷயமாகும்.
உலக டிஸ்லெக்ஸியா தினம், இந்தப் பிரச்சினைகள் பற்றியும் அவற்றை எவ்வாறு சரி செய்வது என்பது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, டிஸ்லெக்ஸியா குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை நடத்துகிறது.
***
(Release ID: 1964931)
ANU/PKV/SMB/KPG/KRS
(रिलीज़ आईडी: 1965056)
आगंतुक पटल : 188