குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து

Posted On: 01 OCT 2023 6:11PM by PIB Chennai

மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு ஜெகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து செய்தி வருமாறு;

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மகாத்மா காந்தியின் சத்தியம் மற்றும் அகிம்சை  ஆகிய கொள்கைகள் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் வழிகாட்டியாக இருந்தன.  சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கான அவரது இடைவிடாத தேடல் பாரதத்திற்கு மட்டுமல்லாமல், உலக சமூகத்திற்கும் ஒரு வழிகாட்டியாக உள்ளது.

தேசப்பிதாவுக்கு நாம் அஞ்சலி செலுத்தும் வேளையில், அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி, காந்தியடிகளின் தற்சார்பு, உள்ளடக்கம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் ஆகியவற்றை நிலைநிறுத்த பாடுபடுவோம் என்று உறுதியேற்போம்.

***

ANU/AD/PKV/DL


(Release ID: 1962845) Visitor Counter : 119


Read this release in: English , Urdu , Hindi , Marathi