வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

ஒன்றாம் தேதி, ஒரு மணி நேரம், ஒன்றாக இணைவோம்: பாபுவுக்குத் தூய்மை அஞ்சலி செலுத்த மகாராஷ்டிரா தயாராகிறது

Posted On: 30 SEP 2023 7:45PM by PIB Chennai

நாடு முழுவதும் தூய்மை இருவார விழா - தூய்மையே சேவை - 2023 க்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. "ஏக் தரீக் ஏக் கன்டா ஏக் சாத்எனப்படும் ஒன்றாம் தேதி, ஒரு மணி நேரம், ஒன்றாக இணைவோம் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை நிறைவேற்ற குடிமக்கள் தயாராகி வருகின்றனர். தூய்மையின் மூலம் பாபுவுக்கு அஞ்சலி செலுத்த உறுதியேற்றுள்ளனர். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தூய்மை இந்தியா இயக்கம் ( நகர்ப்புறம்) நகரங்களை சுகாதாரமான நகரங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுமும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டதைப் போலவே, தூய்மை இருவார விழாவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

 

செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற ஐஎஸ்எல் 2.0 க்கு மகாராஷ்டிராவில் குடிமக்கள் பங்கேற்பு மிகவும் சுவாரஸ்யமானது. முழு தூய்மைப் பணியிலும் மக்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டு நகரின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சுத்தம் செய்வதில் தங்கள் ஒத்துழைப்பை வழங்கினர். அக்டோபர் 1 ஆம் தேதி மகாராஷ்டிராவில் மாநில அளவிலான தூய்மையில் குடிமக்கள் தங்களுக்குப் பிடித்த இடங்களிலிருந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்  வழங்கிய போர்ட்டல் மூலம் பங்கேற்பார்கள். (https://swachhatahiseva.com/). அவரவர்  இடத்திலிருந்து படங்களைக் கிளிக் செய்து போர்ட்டலில் பதிவேற்றவும் முடியும். நீர்நிலைகள்,வழிபாட்டுத்தலங்கள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்றவற்றை சுத்தம் செய்வதன் மூலம் அக்டோபர் 1 ஆம் தேதி பொதுமக்கள் கணிசமான பங்களிப்பை செய்வார்கள்.

 

திறந்தவெளியில் மக்கள் குப்பை கொட்டும் இடத்தை சுத்தம் செய்து அழகுபடுத்த ஹிங்கோலி நகராட்சி மன்றம் குப்பை கொட்டும் இடங்களை தத்தெடுத்துள்ளது. தூய்மைப்  பணியின் ஒரு பகுதியாக அங்கு சில இருக்கைகளையும் அமைக்க உள்ளனர். முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகள் ஹனுமான் கோயில், ஹிங்கோலி ஆகும். இதேபோல், ரத்தினகிரி நகராட்சியின் அனைத்துத் தேர்தல் வார்டுகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அக்டோபர் 1-ம் தேதிக்கு முன்பு நகரத்தை தூய்மையாக மாற்ற ஒரு மணி நேர கோட்பாடு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தக் கருத்தை மக்கள் பாராட்டியது மட்டுமின்றி, இந்த நிகழ்வில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்கவும்  செய்தனர்.

 

தூய்மையான மற்றும் பசுமையான சூழல் என்பது நிலையான வளர்ச்சியில் ஒரு அடிப்படை சித்தாந்தமாகும். தூய்மையின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும், குடிமக்கள் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள், ஆனால் சுற்றுச்சூழலின் தூய்மைக்கு தாங்களும் பொறுப்பு என்பதை அவர்கள் எப்படியோ மறந்து விடுகிறார்கள். ஷிரோல் நகரம் பெருமளவிலான இளைஞர்களின் பங்கேற்பைக் கண்டுள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி, ஸ்ரீ கல்லேஷ்வர் ஏரி, சத்ரபதி சிவாஜி மகாராஜ் தக்த், பஞ்சகங்கா படித்துறைஷிரோலில் உள்ள புவாஃபான் கோயில் ஆகியவற்றுக்கு தூய்மை இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

 

இந்த மெகா தூய்மை இயக்கம் மக்களை இணைக்கும்தேர்ந்தெடுக்கப்பட்ட பாரம்பரிய, ஆன்மீக மற்றும் கலாச்சார இடங்களில் கவனம் செலுத்தும். மெகா தூய்மை இயக்கத்திற்காக நாடு முழுவதும் 8 லட்சத்துக்கும் அதிகமான  இடங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன.

 

***** 

AD/ANU/SMB/KRS



(Release ID: 1962529) Visitor Counter : 93


Read this release in: English , Urdu , Marathi , Hindi