அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

வேளாண் புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 20 கோடி நிதியில் இருந்து தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிக்கு பரிந்துரை

Posted On: 30 SEP 2023 3:20PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (டி.எஸ்.டி) அட்மன் 2023 எனப்படும் வேளாண் புத்தொழில் நிறுவனங்களின் செயல்விளக்க மற்றும் நிதியளிப்பு (ATMAN 2023 - Agri sTartup deMo And fuNding) நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்ததுஇத்துறையில் நம்பிக்கைக்குரிய புத்தொழில் யோசனைகள், கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை விரைவுபடுத்துவதற்காக ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததுஅந்த மொத்த நிதியிலிருந்து 24 புத்தொழில் நிறுவனங்களைத் தேர்வு செய்து தொழில்நுட்ப மற்றும் நிதி உதவி அளி்க்க வல்லுநர்கள் பரிந்துரைத்தனர்.

 

துல்லிய பண்ணையம், வேளாண் ..டி மற்றும் அக்ரி 4.0 குறித்த ஐந்து பிரிவுகளில், புதுமையான தீர்வுகளை மொத்தம் 55 புத்தொழில் நிறுவனங்கள் முன்வைத்தன. நிகழ்ச்சியின் போது ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியில் 20 முக்கிய வேளாண் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

 

அட்மன் திட்டத்தைத் தொடங்கி வைத்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங், புதுமையான தயாரிப்பு மேம்பாடு மட்டுமல்லாமல், பயனுள்ள தேசிய மற்றும் உலகளாவிய சந்தைப்படுத்தலும் தேவை என்று கூறினார். இதை வெற்றிகரமாக மேற்கொள்ள ஆராய்ச்சி, கல்வி, புத்தொழில் மற்றும் தொழில்துறையினரிடையே பரந்த ஒருங்கிணைப்புத் தேவை என்று அவர் தெரிவித்தார்.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோக்லே பேசுகையில், புதுமையான தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள், சேவைகள் மற்றும் அவற்றின் வணிகமயமாக்கலை ஆதரிப்பதன் மூலம் அட்மன் திட்டம் வேளாண் தொழில்நுட்பச் சந்தையில் புத்தொழில் நிறுவனங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று கூறினார்.

Release ID= 1962348

********** 

ANU/AD/PLM/KRS



(Release ID: 1962516) Visitor Counter : 76


Read this release in: English , Urdu , Hindi