நிதி அமைச்சகம்

2023 ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான பொதுக் கடன் மேலாண்மை அறிக்கை

Posted On: 29 SEP 2023 5:58PM by PIB Chennai

2010-11 ஏப்ரல்-ஜூன் (காலாண்டு 1) முதல், நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் பட்ஜெட் பிரிவின் பொதுக் கடன் மேலாண்மை பிரிவு (பி.டி.எம்.சி) வழக்கமான அடிப்படையில் கடன் மேலாண்மை குறித்த காலாண்டு அறிக்கையை வெளியிட்டு வருகிறது. தற்போதைய அறிக்கை ஏப்ரல்-ஜூன் காலாண்டு (2024 நிதியாண்டின் முதல் காலாண்டு) தொடர்பானது.

2023-24ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், தேதியிடப்பட்ட பத்திரங்களை வழங்குதல் / செட்டில்மென்ட் அடிப்படையில் மத்திய அரசு ரூ.4,08,000 கோடி ஈட்டியது. சரி செய்தலுக்குப் பின்னர், ரூ.2,71,415 கோடி மதிப்புள்ள மொத்த தொகையை திரட்டியது. இது, 2022-23ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் 7.13 சதவீதமாகவும், 2023-24ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.34 சதவீதமாகவும் இருந்தது. இந்த காலாண்டில் 91 நாள், 182 நாள் மற்றும் 364 நாள் கருவூல பில்கள் மூலம் திரட்டப்பட்ட மொத்த தொகை ரூ .4,96,266 கோடியாகவும், மொத்த திருப்பிச் செலுத்துதல் ரூ.3,07,278 கோடியாகவும் இருந்தது. 2023 ஏப்ரல்-ஜூன் மாதங்களில், மத்திய அரசின் ரொக்க நிலை பெரும்பாலும் உபரியாகவே இருந்தது.

தற்காலிக தரவுகளின்படி, அரசாங்கத்தின் மொத்த பொறுப்புகள் ('பொதுக் கணக்கின்' கீழ் உள்ள பொறுப்புகள் உட்பட) 2023 மார்ச் இறுதியில் ரூ.1,56,08,634 கோடியிலிருந்து 2023 ஜூன் இறுதியில் ரூ.1,59,53,703 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 2023-24ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், 2.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், நிலுவையில் உள்ள தேதியிட்ட பத்திரங்களில் கிட்டத்தட்ட 26.6 சதவீதம் 5 ஆண்டுகளுக்கும் குறைவான எஞ்சிய முதிர்வு காலத்தைக் கொண்டிருந்தன.

மார்ச் 31, 2023 காலாண்டின் முடிவில் 7.31% ஆக இருந்த 10 ஆண்டு பெஞ்ச்மார்க் செக்யூரிட்டி மீதான லாபம் 2023 ஜூன் 30 ஆம் தேதி முடிவில் 7.12% ஆக குறைந்தது, இதனால் காலாண்டில் 19 அடிப்படை புள்ளிகள் குறைந்துள்ளது.

(வெளியீட்டு ஐடி: 1962144)

***

AD/ANU/ PKV/KRS



(Release ID: 1962284) Visitor Counter : 67


Read this release in: English , Urdu , Hindi