குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எம்.எஸ்.எம்.இ அமைச்சகம் தூய்மையே சேவை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அக்டோபர் 1 ஆம் தேதி "ஒரு நாள் ஒரு மணி நேரம், ஒன்றாக சேர்ந்து " பிரச்சாரம்

Posted On: 29 SEP 2023 10:26AM by PIB Chennai

எம்.எஸ்.எம்.இ அமைச்சகம் அக்டோபர் 1, 2023 அன்று தூய்மையே சேவை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக "ஒரு நாள் ஒரு மணி நேரம், ஒன்றாக சேர்ந்து "  என்னும் இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்கும்.

"ஒரு நாள் ஒரு மணி நேரம், ஒன்றாக சேர்ந்து "  செயல்பாட்டிற்காக அமைச்சகம் அதன் துணை அமைப்புகள் மூலம் 200 க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை நடத்த  உறுதி செய்துள்ளது. தேசிய சிறுதொழில் கழகம் (என்.எஸ்.ஐ.சி), கதர் மற்றும் கிராமத் தொழில்கள் (கே.வி.ஐ), கயிறு வாரியம், எம்.ஜி.ஆர்.ஐ-வார்தா மற்றும் நிம்ஸ்மே-ஹைதராபாத் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்- மேம்பாட்டு வசதி அலுவலகங்கள் (எம்.எஸ்.எம்.இ-டி.எஃப்.ஓ) அதன் நாடு தழுவிய அலுவலகம், பயிற்சி மையங்கள் மூலம் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்கும்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைச்சகம் இந்த முயற்சியை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. செயலாளர் திரு. எஸ்.சி.எல். தாஸ், இந்த பிரச்சாரத்திற்காக அமைச்சகத்தில்  உள்ள பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களை கண்காணித்து ஆய்வு செய்து வருகிறார்.

 

இந்தியா முழுவதும் 2023 அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற உள்ள முழு பிரச்சாரம் மற்றும் செயல்பாடுகளின் முன்னேற்பாடுகளை மேற்பார்வையிட அமைச்சகம் இணை செயலாளர் அளவிலான ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமித்துள்ளது. எஸ்.எச்.எஸ் 2023 இன் கருப்பொருள் "குப்பை இல்லாத இந்தியா" என்பதாகும். செப்டம்பர் 15 முதல் அக்டோபர் '23 வரை நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரம் (எஸ்.சி.டி.பி.எம்) 3.0, தூய்மையே சேவை பிரச்சாரம் ஆகியவற்றை அமைச்சகம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

----

ANU/AD/PKV/KPG


(Release ID: 1962055) Visitor Counter : 194
Read this release in: English , Urdu , Hindi , Marathi