நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

9 மாநிலங்களில் 981 கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கும் நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்கள்

Posted On: 27 SEP 2023 12:51PM by PIB Chennai

நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் நிலக்கரி சுரங்க நீர் ஆதாரங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதால்ஒன்பது மாநிலங்களைச் சேர்ந்த 981 கிராமங்களைச் சேர்ந்த 17.7 லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.  2022-23 நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்கள் சுமார் 8130 லட்சம் கனமீட்டர் சுரங்க நீரை வெளியேற்றியுள்ளன. இதில் 46% உள்நாட்டு மற்றும் நீர்ப்பாசன நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு 49 சதவீதமும், நிலத்தடி நீர் செறிவூட்டல் முயற்சிகளுக்கு 6 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் பாசனத்திற்கு சுரங்க நீர் உகந்ததாக இருப்பதை உறுதி செய்வதற்காக, பல்வேறு சுத்திகரிப்பு முறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆண்டு முழுவதும் சமூகங்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான நீர் அணுகலை வழங்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளின் போது, கணிசமான அளவு சுரங்க நீர் சுரங்க தொட்டிகளில் தேங்குகிறது. இந்த வெற்றிடங்கள் அடுக்குகளில் இருந்து கசிவு நீரை சேமிப்பது மட்டுமல்லாமல், சுற்றியுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து மேற்பரப்பு நீரோட்ட நீரை சேகரித்து, விரிவான நீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டல் கட்டமைப்புகளாக திறம்பட செயல்படுகின்றன. இந்த சேமிக்கப்பட்ட சுரங்க நீர் வீட்டு மற்றும் குடிநீர் விநியோகம், விவசாய நிலங்களின் நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் நிரப்புதல் மற்றும் தூசி தடுப்பு மற்றும் கனரக இயந்திரங்கள் கழுவுதல் போன்ற பல்வேறு தொழில்துறை பயன்பாடுகள் உள்ளிட்ட பல சமூக நோக்கங்களுக்கு உதவுகிறது.

மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சவ்வூடு முறை மற்றும் கசிவு நீர் பயன்பாட்டு முறையில் சுரங்க நீர் விவசாயத்துக்கும், குடிநீர் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் சுரங்க நீர் ஆதாரங்களைப் பயன்படுத்தி, பொறுப்பான மற்றும் நிலையான சுரங்க நடைமுறைகளுக்கு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்கள் உறுதிபூண்டுள்ளன.

**

ANU/AD/PKV/KPG

 

 

 


(Release ID: 1961400) Visitor Counter : 110