ஊரக வளர்ச்சி அமைச்சகம்
மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங் ஊரக வளர்ச்சிக்கான சமூக தணிக்கை குறித்த 2-வது தேசிய கருத்தரங்கில் உரையாற்றினார்
Posted On:
26 SEP 2023 5:44PM by PIB Chennai
மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், ஊரக வளர்ச்சிக்கான சமூக தணிக்கை குறித்த 2- வது தேசிய கருத்தரங்கில் இன்று (26.09.2023) உரையாற்றினார். நிதிக் கட்டுப்பாட்டைப் பராமரிக்க மத்திய மற்றும் மாநில திட்டங்களுக்கும் சமூக தணிக்கை முதுகெலும்பாக உள்ளது என்று கூறினார். சமூக தணிக்கை செயல்பாட்டில் மக்கள் பங்கேற்பு மைய புள்ளியாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சமூகத் தணிக்கையின் அதிகபட்ச பயனைப் பெறுவதற்காக, அதன் தாக்கத்தை சம்பந்தப்பட்ட அனைவரும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமூக தணிக்கை செயல்முறைகளை மேம்படுத்த வல்லுநர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் நுண்ணறிவுகள் நிச்சயமாக உதவும் என்று இந்நிகழ்ச்சியில் பேசிய, ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் திரு சைலேஷ் குமார் சிங் கூறினார்.
பல்வேறு மாநிலங்களின் சமூக தணிக்கைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் ஆணையர் ஆகியோர் சமூக தணிக்கையில் தங்கள் சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சமூக தணிக்கை பிரிவினர், பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.
-----------
(Release ID: 1960958)
AD/ANU/PLM/RS/KRS
(Release ID: 1961058)
Visitor Counter : 190