மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய மீன்வள ஆய்வகத்தில் புதிதாக புதுப்பிக்கப்பட்டுள்ள கடல்சார் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்
Posted On:
26 SEP 2023 4:39PM by PIB Chennai
விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய மீன்வள ஆய்வகத்தில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட கடல்சார் அருங்காட்சியகத்தை மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, மாநிலங்களவை உறுப்பினர் திரு ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். அருங்காட்சியகத்தில் உள்ள அனைத்து மாதிரிகளும் நவீன தொழில்நுட்பத்துடன் (கியூஆர் கோடிங் போன்றவை) காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன, இதில், முழுமையான தகவல்களை ஒரே கிளிக்கில் பெற முடியும், மேலும் இது அறிவியல் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
திரு பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் திரு ஜி.வி.எல் நரசிம்ம ராவ் ஆகியோர் விசாகப்பட்டினம் இந்திய மீன்வள கணக்கெடுப்பு மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் ஆர்.ஜெயபாஸ்கரன் மற்றும் விசாகப்பட்டினத்தின் எஃப்.எஸ்.ஐ.யின் எம்.எம்.இ / அலுவலகத் தலைவர் திரு டி.பாமி ரெட்டி ஆகியோரால் நேற்று விசாகப்பட்டினத்தில் வரவேற்கப்பட்டனர். தொடக்கத்தில் மீன்வளத் துறையின் சார்நிலை அலுவலகங்களான இந்திய மீன்வள ஆய்வு (எஃப்.எஸ்.ஐ), மத்திய மீன்வள நாட்டிகல் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனம் (சிஃப்நெட்) மற்றும் தேசிய மீன்வள அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி நிறுவனம் (என்.ஐ.எஃப்.பி.எச்.டி.டி) ஆகியவற்றின் செயல்பாடுகளை மத்திய அமைச்சர் ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் மூன்று துறைத் தலைவர்களும், அலுவலகத் தலைவர்களும் கலந்து கொண்டனர். மூன்று நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அவர், விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளை உடனடியாக அமைச்சகத்துக்கு அனுப்புமாறு தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, விசாகப்பட்டினத்தின் எஃப்.எஸ்.ஐ.யில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் மீன்பிடித் தொழில், கடல் உணவு ஏற்றுமதியாளர் சங்கங்கள், குஞ்சு பொரிப்பக உரிமையாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் திரு பர்ஷோத்தம் ரூபாலா கலந்துரையாடினார், அங்கு 40 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் மற்றும் உலகெங்கிலும் மீன் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் உள்ள சிரமங்களை விளக்கினர். இத்தொழிலுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அரசுக்கு கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் நன்றி தெரிவித்தார். இந்திய மீன்வளத் துறை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஆர்.ஜெயபாஸ்கரன், கொச்சி சிஃப்நெட் இயக்குநர் டி.பாமி ரெட்டி, சி.எஸ்., என்.ஐ.எப்.பி.எச்.டி.டி., இயக்குனர் டாக்டர் ஷைன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
***
AD/PKV/KRS
(Release ID: 1961047)
Visitor Counter : 100