மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

புனேவில் நாளை நடைபெறும் 9-வது வேலைவாய்ப்பு விழாவில் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பங்கேற்கிறார்.

Posted On: 25 SEP 2023 7:06PM by PIB Chennai

புனேவில் நாளை நடைபெறும் 9-வது வேலைவாய்ப்பு விழாவில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் பங்கேற்க உள்ளார்.

 

புதிதாகப்  பணியில் சேரும்  51,000 பேருக்குப் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்குகிறார்.

 

புதிதாக வேலைக்கு அமர்த்தப்படுவோர்  ஐகாட் கர்மயோகி போர்ட்டலில் கிடைக்கும் ஆன்லைன் தொகுதியான கர்மயோகி பிராரம்ப் மூலம் தங்கள் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். இங்கே, அவர்கள் எந்த சாதனத்திலும் எந்த இடத்திலிருந்தும் நெகிழ்வான கற்றலுக்காக வடிவமைக்கப்பட்ட 680 க்கும் மேற்பட்ட மின் கற்றல் படிப்புகளை அணுகலாம்.

 

கடந்த ஆகஸ்ட் மாதம் ஐதராபாதில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழாவில் அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் பங்கேற்று உரையாற்றினார். சவால்களைச் சமாளிப்பதற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்க முன்னுரிமை அளிப்பதற்கும், இளம் இந்தியர்களின் திறன்களை வளர்ப்பதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை அமைச்சர் அப்போது எடுத்துரைத்தார்.

 

 பிரதமர் திரு. மோடி தலைமையின் கீழ், பொது சேவை என்ற கருத்தாக்கம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அரசுப் பதவியில் இருப்பது  சேவை, நிர்வாகம் மற்றும் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படுவோரை  கவனிப்பது பற்றியது. இது அதிகாரம் அல்லது கட்டுப்பாடு பற்றியது அல்ல என்றும் அவர் கூறினார்.

***

 

ANU/SM/SMB/KRS


(Release ID: 1960719) Visitor Counter : 118