பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
காம்பியாவின் மூத்த குடிமைப் பணி அதிகாரிகளுக்கான பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகம் குறித்து வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து நடைபெற்ற ஒரு வார பயிற்சி திட்டம் முடிவடைந்தது
Posted On:
23 SEP 2023 3:57PM by PIB Chennai
காம்பியாவின் மூத்த குடிமைப் பணி அதிகாரிகளுக்கான பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகம் குறித்த ஒரு வார பயிற்சி திட்டம் புதுதில்லியில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் காம்பியாவைச் சேர்ந்த 30 நிரந்தரச் செயலாளர்கள், துணை செயலாளர்கள், இயக்குநர்கள் கலந்து கொண்டனர். காம்பியாவின் அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க டி.ஏ.ஆர்.பி.ஜி மற்றும் காம்பியா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நிறைவு அமர்வில், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்வு துறை செயலாளர் திரு வி.ஸ்ரீனிவாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குடிமக்களின் வாழ்க்கையை மாற்றுவதில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான கருத்தியல் கட்டமைப்பை உருவாக்கவும், நாட்டின் முழுமையான வளர்ச்சிக்காக பணியாற்றவும் அவர் அழைப்பு விடுத்தார். கூட்டாண்மைகளை உருவாக்குவதன் மூலம் நாடுகளிடையே உறவுகளை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தையும், சாத்தியமான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
நிறைவு விழாவில், காம்பியா குடியரசின் தூதர் திரு முஸ்தபா ஜவாரா, ஒவ்வொரு துறையிலும் பயிற்சித் திட்டத்தைப் பாராட்டினார். காம்பியா மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை வழங்க உதவும் இந்தியாவின் பல்வேறு நிறுவனங்களுடன் ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வெளிப்படுத்தினார்.
பயிற்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ.பி.சிங், இணை பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் முகேஷ் பண்டாரி, திட்ட உதவியாளர் திரு சஞ்சய் தத்தா பந்த் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
***
ANU/SM/PKV/DL
(Release ID: 1959966)