வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

தூய்மை இருவார விழாவுக்காக நவி மும்பையின் தனித்துவமான முயற்சி

Posted On: 21 SEP 2023 5:28PM by PIB Chennai

தூய்மை இருவார விழா -தூய்மையே சேவை 2023 நாடு முழுவதும் உள்ள மக்களிடமிருந்து பெரும் பங்கேற்பைக் காண்கிறது. பொதுமக்கள் ஒன்றிணைந்து தங்கள் சுற்றுப்புறங்கள், பொது இடங்கள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில் பாதைகள், மலைகள், கடற்கரைகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள், குப்பைக் கிடங்குகளை சுத்தம் செய்து வருகின்றனர்.

நவி மும்பையில் துப்புரவுப் பணியாளர்கள், குடிமக்கள், இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், யு.எல்.பி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பிரபலங்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்கின்றனர். நகரம் புதுமையான தூய்மை நடவடிக்கைகளின் அழகான கலவையை வழங்கியது, இது அனைவரையும் உள்ளடக்கிய சுகாதாரத்தின் அடையாளமாகும். மஹாராஷ்டிராவில் உள்ள நவி மும்பையில் பல்வேறு முயற்சிகள் மற்றும் பிரச்சாரங்கள் மூலம் ஏராளமான குடிமக்கள் பங்கேற்பு மற்றும் அணிதிரட்டலைக் கண்டது. ஆனால், திருநங்கை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பங்கேற்புதான் நகரத்திற்கு தனித்துவமாக இருந்தது.

தூய்மையே சேவை இயக்கம் குறித்தும், குறிப்பாக தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம் குறித்தும், பொதுவில் முறையான சுகாதாரத்தின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பை பொறுப்புள்ள குடிமக்களாக சமூகம் ஏற்றுக்கொண்டது. ஐ.எஸ்.எல் 2.0 இன் போது வாஷி வார்டின் மினி கடற்கரையில், நகரில் உள்ள 250 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வெகுஜன தூய்மை இயக்கத்தை நடத்தினர். "சஃபாய் தோ மாட் - சஃபாய் கரோ" என்பது நவி மும்பையின் திருநங்கைகள் நகரத்தில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் தூய்மையே சேவை இரு வாரத்திற்காக தெரிவித்த செய்தியாகும். குறை கூறாமல், குப்பையில்லா நகரமாக மாற்ற தூய்மைக்காக செயல்பட வேண்டியதன் அவசியத்தை இந்தப் பிரசாரப் பெயர் எடுத்துரைத்தது. சேலை உடுத்தி, வெள்ளை தொப்பி அணிந்து, இரட்டைத் தொட்டிகள், பிரச்சார ஸ்டாண்டுகள், பதாகைகள் போன்ற முக்கிய தூய்மை அம்சங்களால் சூழப்பட்டு, அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை அவர்கள் ஈர்த்தனர். கழிவுகளைப் பிரிப்பதை ஊக்குவிக்கும் அவர்களின் தனித்துவமான முன்முயற்சியும் வழிப்போக்கர்களால் நன்கு பாராட்டப்பட்டது.

இந்தப் புதுமையான பிரச்சாரத்தின் மூலம், திருநங்கைகள் அனைவரையும் உள்ளடக்கிய சுகாதாரத்தில் கவனம் செலுத்தி, மாற்றத்தின் இயக்கிகளாக மாறினர். ஒவ்வொரு முயற்சியும் முக்கியம் என்பதால், இந்தியாவை குப்பை இல்லா நாடாக மாற்ற, சிறிய பங்களிப்பை கூட செய்ய வேண்டும் என்ற உத்வேகம் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது.

***
 

AD/ANU/PKV/KRS



(Release ID: 1959481) Visitor Counter : 94


Read this release in: English , Urdu , Hindi , Marathi