சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மற்றும் காயத்ரி பரிவார் இடையே நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
Posted On:
21 SEP 2023 4:13PM by PIB Chennai
போதைப் பொருள் பயன்பாடு நாட்டின் சமூக கட்டமைப்பை மோசமாக பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். இது தனிநபரின் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பங்களையும் சீர்குலைக்கிறது.
போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த போதைப் பொருள் இல்லா இந்தியா இயக்கத்தை (என்.எம்.பி.ஏ.) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் மத மற்றும் ஆன்மீக அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த திசையில் அதன் ஒரு பகுதியாக காயத்ரி பரிவார் என்ற ஆன்மீக வாழ்க்கைமுறை அமைப்புடன் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளது.
புதுதில்லியில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் செப்டம்பர் 22, 2023 அன்று காலை 09:00 மணிக்கு மத்திய நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திரகுமார், துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் காயத்ரி பரிவார் நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்கள் முன்னிலையில் இதற்கான விழா நடைபெறுகிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், போதைப் பொருள் இல்லா இந்தியா இயக்கத்தின் இலக்குகளை அடைய மேலும் ஊக்கம் ஏற்படும் என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை கருதுகிறது.
***
AD/ANU/PLM/RS/GK
(Release ID: 1959418)