சுரங்கங்கள் அமைச்சகம்
சுரங்கத்துறை செயலாளர் வி.எல்.காந்தா ராவ் தூய்மை உறுதிமொழி ஏற்றார்
Posted On:
21 SEP 2023 3:43PM by PIB Chennai
சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் திரு வி.எல்.காந்தா ராவ், அமைச்சகம், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சார்நிலை அலுவலகங்களின் உயர் அதிகாரிகளுடன் இணைந்து 'தூய்மையே சேவை' இயக்கத்தின் கீழ் இன்று காணொலிக் காட்சி மூலம் இணைந்து தூய்மை உறுதிமொழியை ஏற்றார்.
இதற்கு முன் 2023 செப்டம்பர் 20 அன்று சுரங்கத்துறை செயலாளர் தூய்மையே சேவை-2023-ன் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் சிறப்பு இயக்கம் 3.0-க்கான தயாரிப்புகளை ஆய்வு செய்தார். மறுஆய்வுக் கூட்டத்தின் போது, #SwachhataHiSeva இயக்கத்திற்காக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சகத்திற்குள் உள்ள அனைத்து இணைப்பு அலுவலகங்களையும் திரு ராவ் வலியுறுத்தினார், மேலும் முந்தைய இயக்கத்துடன் ஒப்பிடும்போது சிறப்பு இயக்கம் 3.0-க்கு அதிக இலக்குகளை நிர்ணயிக்க அனைவரையும் ஊக்குவித்தார்.
புதுதில்லியில் உள்ள சாஸ்திரி பவனில் உள்ள சுரங்க அமைச்சகத்தின் பதிவு அறை மற்றும் பிரிவுகளையும் செயலாளர் ஆய்வு செய்தார். #SwachhtaHiSewa இயக்கத்தின் கீழ் தூய்மை, பணிச்சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்ய பல்வேறு பிரிவுகளைச் பார்வையிட்டார். ஒவ்வொரு பிரிவிலும் உள்ள கோப்புகளை ஆய்வு செய்யும் போது, கோப்புகளை மறுஆய்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கினார். சிறப்பு இயக்கம் 1.0 மற்றும் 2.0-ல் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கோப்புகளை அமைச்சகம் அப்புறப்படுத்தியது.
2022 நவம்பர் முதல் 2023 ஆகஸ்ட் வரை சுரங்க அமைச்சகம் சுமார் 2743 கோப்புகளை அகற்றியது. மொத்தம் 34549 சதுர அடி இடத்தை விடுவித்து, பழைய பொருட்களை அகற்றியதன் மூலம் மொத்தம் ரூ.172,130,148 வருவாய் ஈட்டியுள்ளது.
பதிவு மேலாண்மையில் கவனம் செலுத்துவதற்காக 2023 அக்டோபர் 31 வரை வரவிருக்கும் அனைத்து சனிக்கிழமைகளையும் ஊழியர்களுக்கு வேலை நாட்களாக சுரங்க அமைச்சகம் அறிவித்துள்ளது.
***
(Release ID: 1959404)
Visitor Counter : 128