நிதி அமைச்சகம்

நான்காவது உள்கட்டமைப்பு பணிக்குழு கூட்டம் 2023 செப்டம்பர் 21-22 தேதிகளில் மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோவில் நடைபெறும்

Posted On: 20 SEP 2023 5:21PM by PIB Chennai

ஜி20 இந்தியா தலைமைத்துவத்தின் கீழ் 4-வது ஜி 20 உள்கட்டமைப்பு பணிக்குழுக் கூட்டம் 2023 செப்டம்பர் 21 முதல் 22 வரை மத்திய பிரதேசத்தின் கஜுராஹோவில் நடைபெற உள்ளது. இது இந்திய ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் உள்கட்டமைப்பு பணிக்குழுவின் கடைசி கூட்டமாகும். மேலும் ஜி20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிலிருந்து 54-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும். முந்தைய மூன்று உள்கட்டமைப்புப் பணிக்குழுக் கூட்டங்களின் போது நடைபெற்ற விவாதங்களின் தொடர்ச்சியாக இந்தக் கூட்டம் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும். மத்திய அரசின் நிதியமைச்சகம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் ஆஸ்திரேலியா, பிரேசில் ஆகிய நாடுகள் இணைத் தலைவர்களாக பங்கேற்கின்றன.

 

உள்கட்டமைப்பை ஒரு சொத்து அடிப்படையில் வகைப்படுத்துதல், தரமான நகர்ப்புற உள்கட்டமைப்பு,  உள்கட்டமைப்புத் தொழில்நுட்பம், நெகிழ்வான, நிலையான மற்றும் உள்ளடக்கிய நகர்ப்புற உள்கட்டமைப்பை நோக்கி முதலீட்டிற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவதற்கான பல்வேறு அம்சங்கள் குறித்து ஜி20 உள்கட்டமைப்பு பணிக்குழு விவாதிக்கிறது.

 

கஜுராஹோவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை கண்டுகளிக்க தலைமைத்துவம் ஏற்பாடு செய்துள்ளது. கஜுராஹோவில் தங்கியிருக்கும் போது, பிரதிநிதிகள் வெஸ்டர்ன் குரூப் ஆஃப் டெம்பிள்ஸ், அடிவார்ட் அருங்காட்சியகம் மற்றும் ரானே நீர்வீழ்ச்சியில் உள்ள புகழ்பெற்ற யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தை பார்வையிடுவார்கள்.

*****

(Release ID:1959077)

ANU/SM/IR/KPG/KRS



(Release ID: 1959177) Visitor Counter : 93


Read this release in: Telugu , English , Urdu , Hindi