சுரங்கங்கள் அமைச்சகம்
தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சக ஆலோசனைக் குழு ஆய்வு
Posted On:
20 SEP 2023 3:17PM by PIB Chennai
நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழுவின் கூட்டம் 2023 செப்டம்பர் 19 அன்று நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றது. தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளையின் செயல்திறனை மறுஆய்வு செய்த குழுவின் உறுப்பினர்களிடையே உரையாற்றிய மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி, கனிம ஆய்வுகளை மேலும் ஊக்குவிக்கவும், கனிம உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கணிசமான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது என்றார். இந்தியாவுக்கான 30 முக்கியமான கனிமங்களின் பட்டியலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு ஜோஷி, இந்தியாவில் முக்கியமான கனிமங்களின் ஏல செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
"நாட்டில் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதில் தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளையின் பங்களிப்பு மற்றும் பொறுப்பில் அதன் செயல்திறன்" என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. செயலாளர் திரு.வி.எல்.காந்தா ராவ் தலைமையிலான சுரங்க அமைச்சகக் குழு, தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளையின் செயல்திறனை எடுத்துக்காட்டும் விளக்கக்காட்சியை வழங்கியது. ஆழமான மற்றும் சிக்கலான கனிம ஆய்வுக்கு திட்ட மதிப்பீட்டில் 25% ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1959027
***
ANU/AD/IR/KPG/KV
(Release ID: 1959085)
Visitor Counter : 126