உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
ஏஏஐ விமான ஆய்வுத் திட்ட வரிசையில் இரண்டு புதிய பி -360 வகை விமானங்களை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சேர்த்தது
Posted On:
18 SEP 2023 6:11PM by PIB Chennai
அதிகரித்து வரும் விமானப் போக்குவரத்து தேவைகள் மற்றும் விமான கையாளுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள கூடுதல் தரைவழி வழிசெலுத்தல் / தரையிறங்கும் கருவிகளின் பிபிஎன் நடைமுறைகள் சரிபார்ப்புக்காக இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) இன்று இரண்டு புதிய பி -360 வகை விமானங்களை ஏஏஐ விமான ஆய்வுத் திட்ட வரிசையில் சேர்த்துள்ளது. இந்த புதிய விமானங்களை இந்த திட்டத்தில் சேர்ப்பதன் மூலம், நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் தரைவழி மின்காந்த அலைகள் மூலமான வழி நடத்துதல் / காட்சி வழி உதவிகள் மூலம் சரியான நேரத்தில் விமானங்களின் கையாளுதலை ஏஏஐ நிறைவேற்ற முடியும். அண்டை நாடுகளில் விமான கையாளுதலை மேற்கொள்வதற்கு ஏஏஐ தேவையான ஆதரவை வழங்கும், இது வருவாயை உருவாக்கவும் வழிவகுக்கும்.
விமானங்கள் கையாளுதல் சேவையில் கண்காணிப்பை மேற்கொள்ள இரண்டு புதிய விமானங்களைச் சேர்ப்பதை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எஃகு அமைச்சர் திரு ஜோதிராதித்யா சிந்தியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்; புதுதில்லி சப்தர்ஜங் விமான நிலையத்தில் நடைபெற்ற பூஜையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெனரல் (டாக்டர்) விஜய் குமார் சிங் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் திரு வும்லுன்மங் வுல்னம், இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் திரு சஞ்சீவ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் விமான ஆய்வுப் பிரிவு, இந்திய வான்வெளி முழுவதும் வழங்கப்படும் வான் வழிசெலுத்தல் சேவையின் பாதுகாப்புச் சங்கிலியில் மிக முக்கியமான அங்கமாகும். விமான உள்கட்டமைப்புகளின் முக்கியத்துவத்தையும், நாட்டில் விமான நிலையங்களின் வலையமைப்பை விரிவுபடுத்துவதையும் கருத்தில் கொண்டு, பாதுகாப்பான விமான இயக்கத்திற்காக அனைத்து விமான நிலையங்களிலும் வழிசெலுத்தல் கருவிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்ச்சியில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எஃகு அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, "மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட இரண்டு புதிய பி -360 வகை விமானங்களை ஏஏஐ விமான ஆய்வுப் பிரிவின் திட்டத்தில் சேர்த்துள்ளது. விமானங்கள் கையாளும் சேவைகள் பல்வேறு வான் வழிசெலுத்தல் சேவைகள் நடைமுறைகளை சரிபார்ப்பதன் மூலம் விமானத்தின் திறமையான மற்றும் பாதுகாப்பான செயல்பாட்டை உறுதி செய்கின்றன.
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ) நிர்ணயித்துள்ள சிறந்த சர்வதேச தரங்களை உறுதி செய்வதில் விமான ஆய்வு முக்கியமானது, இந்திய விமானப் போக்குவரத்து கடுமையான அளவுருக்களுக்கு ஏற்ப செயல்பட இந்த உபகரணங்களைப் பெறுவதை உறுதி செய்ய வேகம் இருக்க வேண்டும். தற்சமயம், ஏஏஐயின் எஃப்.ஐ.யு விமான அளவுத்திருத்தம் / ஆய்வு நோக்கங்களுக்காக ஒரு டோர்னியர் -228 மற்றும் ஒரு பி -350 விமானங்களை இயக்குகிறது மற்றும் நாடு முழுவதும் உள்ள பல விமான நிலையங்களில் நிறுவப்பட்ட டாப்ளர் வி.ஓ.ஆர், டி.எம்.இ, என்.டி.பி போன்ற தரையிறங்கும் கருவிகள் மற்றும் துல்லிய அணுகுமுறை பாதை குறிகாட்டி போன்ற வழிசெலுத்தல் உதவிகளை அளவீடு செய்கிறது.
பிரயாக்ராஜ் என்று அழைக்கப்படும் அலகாபாத்தின் பாம்ரௌலியில் 1959 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட எஃப்.ஐ.யு 1986 இல் சப்தர்ஜங் விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டது. டகோட்டா விமானங்களில் தொடங்கி, எஃப்.ஐ.யூ பின்னர் எச்.எஸ் 748 ஏ.வி.ஆர்.ஓவுக்கும், பின்னர் டோர்னியர் டிஓ -228 மற்றும் பீச்கிராஃப்ட் கிங் ஏர் பி 350 க்கும் சென்றது.
***
(Release ID: 1958584)
SM/KRS
(Release ID: 1958620)