உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டெல்லி சஃப்தர்ஜங் விமான நிலையத்தில் 'உதான் பவன்' கட்டிடத்தை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திறந்து வைத்தார்

Posted On: 18 SEP 2023 5:44PM by PIB Chennai

சிறந்த ஒருங்கிணைப்புக்காக அனைத்து விமானப்போக்குவரத்து ஒழுங்குமுறை அதிகாரிகளும் ஒரே அமைப்பின் கீழ் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அருகாமையில் ஒரு அலுவலகம் இருக்க வேண்டும் என்பது நீண்ட காலமாக உணரப்பட்ட தேவையாகும். டெல்லி சஃப்தர்ஜங் விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த அலுவலக வளாகமான 'உதான் பவன்' கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டது, இதை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் (டாக்டர்) விஜய் குமார் சிங் (ஓய்வு) மற்றும் செயலாளர் திரு வும்லுன்மங் வுல்னம் ஆகியோர் முன்னிலையில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எஃகு அமைச்சர் திரு ஜோதிராதித்யா எம் சிந்தியா திறந்து வைத்தார்.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகம், விமான விபத்து புலனாய்வு பணியகம் மற்றும் விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவை ஒழுங்குமுறை அதிகாரிகளாக இருப்பதால், தரநிலைகளின்படி விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்கி செயல்படுத்துவதன் மூலம் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்திய விமான நிலையங்கள் ஆணையம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் கட்டுமானம், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புக்கு பொறுப்பான முக்கிய விமான நிலைய செயல்பாட்டாளர். புது தில்லியில் உள்ள சஃப்தர்ஜங் விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த அலுவலக வளாகம் உதான் பவன், கட்டப்பட்டுள்ளது. இது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் பல்வேறு ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை எளிதாக்கும்.

71,257 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இக்கட்டடத்தின் மொத்த கட்டுமானப் பணி ரூ.374.98 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது.

 

***

SM/ANU/IR/RS/KPG


(Release ID: 1958615) Visitor Counter : 161


Read this release in: English , Urdu , Hindi